October 3, 2016 தண்டோரா குழு
இந்திய அணியின் கேப்டன் தோனியின் வாழ்கையை மையமாக வைத்து கடந்த 30ம் தேதி எம்எஸ் தோனி திரைபடம் வெளியானது. இப்படம் டோனியின் கஷ்டமான வாழ்க்கையை பற்றியும்,அவர் கிரிக்கெட்டுக்குஎப்படி வந்தார் என்பதையும் சொல்கிறது.
தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்க்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். ஓவ்வொரு போட்டியிலும் ஒருமுறையாவது அந்த ஷாட்டை அடிக்க முயற்சி செய்வார். ஆனால் உண்மையில் அந்த ஷாட்டை கண்டுபிடித்து அவர் கிடையாது அவரது நண்பர் சந்தோஷ் லால் தான். இந்த ஷாட்டை தாப்பாட் என்று சந்தோஸ் அழைப்பார். அவருக்கு சமோசா வாங்கிக் கொடுத்து அந்த ஷாட்டை அடிக்க நான் கற்றுக் கொண்டேன்” என தோனி கூறியுள்ளார். இந்த காட்சிகள் தோனி படத்திலும் இடம்பெற்று உள்ளது.
தோனியின் சிறுவயது நண்பர் தான் சந்தோஷ்லால். இவரும் ராஞ்சி அணிக்காக விளையாடி உள்ளனர். ஆனால், அவர் கடந்த 2013ம் ஜூலை மாதம் உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்துள்ளார்.
டோனி வெளிநாட்டு சுற்றுபயணம் மேற்கொண்டு இருந்த நேரத்தில் சந்தோஷ்க்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. இருப்பினும் அவருடைய மருத்துவ செலவை ஏற்கதயாராக இருந்தார் தோனி.
ஆனாலும், சந்தோஷ் உயிரிழந்தார். இன்று வரை அவர் இல்லாதது வருத்தம் தான் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் தோனி கூறியுள்ளார்.