January 6, 2018 தண்டோரா குழு
சுமார் 3 ஆண்டுகளுக்கு முன், மாயமான மலேசிய விமானத்தை மீண்டும் தேடும் பணிக்கு மலேசிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு, மலேசியாவின் கோலாலம்பூர் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து, சீனா நாட்டின் பெய்ஜிங்க்கு Boeing777 விமானம்,சுமார் 273 பயணிகள் மற்றும் 12 விமான ஊழியர்களுடன் பயணமானது. சுமார் 1.19 மணியளவில் விமானநிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்புக்கொண்டது. அதன்பிறகு, அந்த விமானியிடம் இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது.
காணமல்போன அந்த விமானத்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் உதவ முன்வந்தன. தாய்லாந்து நாட்டின் வளைகுடா முதல் ஆஸ்திரேலியா நாட்டின் கடற்கரை வரை தேடப்பட்டது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்கள் விமானப்படை மற்றும் கப்பல் படையின் உதவியுடன், காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர். ஆனால்,அவர்களால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி, தேடுதல் பணியை கைவிட்டனர்.
இந்நிலையில், காணமல்போன அந்த விமானத்தை மீண்டும் கண்டுபிடிக்க மலேசிய நாட்டின் அரசு அனுமதி வழங்கியுள்ளது.மலேசியா நாட்டின் அரசு, அந்த விமனாத்தை கண்டுபிடிக்க ஆதரவு வழங்கியுள்ளது.
இந்நிலையில், மாயமான மலேசிய விமானத்தைக் கண்டுபிடிக்க அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன் இன்ஃபினிட்டி நிறுவனம் முன் வந்ததுள்ளது. மலேசிய அரசுடனான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஓசன் இன்ஃபினிட்டி நிறுவனத்தின் கப்பல், விமானம் விழுந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் இடத்தை நெருங்கி தேடுதலைத் தொடங்கவுள்ளது.