• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மண்ணின் மைந்தனுக்கு ‘பூஷண்’ ‘விருது, மராட்டிய எம்.எல்.ஏ பரிந்துரை

August 1, 2016 தண்டோரா குழு

உலகத்தையே திரும்பிப் பார்க்கச் செய்தது ரஜினியின் கபாலித் திரைப்படம் என்றால் நடிகர் ரஜினிகாந்தின் திறமையை வார்த்தையால் வர்ணிக்க முடியாது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் பாஜக சட்டமன்ற உறுப்பினரான அனில் கொடெ நடிகர் ரஜினிகாந்திற்கு மகாராஷ்டிராவின் உயரிய விருதான பூஷண் விருதை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஜினி காந்த் என அழைக்கப்படும் ஷிவாஜிராவ் கைக்வட் மகாராஷ்டிராவிலுள்ள கோல்காப்பூரைச் சேர்ந்தவர்.

தமிழ் மற்றும் ஹிந்தி திரையுலகத்திற்கும் இவரது பங்களிப்பு ஏராளம். 65 வயதிலும் இவரது பாணியும், நடிப்பும் இளைய சமுதாயத்தினரை எழுச்சியூட்டுகின்றன. ரஜினி மராட்டிய மாநிலத்திற்குப் பெருமை சேர்ப்பவர். ஆகையால் இவ்விருதைப் பெற முற்றிலும் தகுதியானவர் என்று அனில் கொடெ தெரிவித்தார்.

மேலும் பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்த மாநில அரசு சபையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஒரே நேரத்தில் உலகளவில் 8,000 திரையரங்குகளில் கபாலி திரையிடப்பட்டிருப்பது ரஜினியின் திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று தன் வாதத்திற்கு அனில் கொடெ வலுசேர்த்தார்.

மேலும் படிக்க