August 23, 2016
தண்டோரா குழு
இந்த ஆண்டே மேட்டுப்பாளையத்தில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்கப்படும் என முதல்வர் 110 விதியின் கீழ் தெரிவித்துள்ளார்.
இன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற கல்வித்துறை மானிய கோரிக்கை முடிந்து முதல்வர் அவர்கள் 110 விதியின் கீழ் பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.அதில் குறிப்பிடும்படியாக தமிழகத்தில் 5 புதிய துவக்கப்பள்ளிகள் திறக்கப்படும்,விழுப்புரம் மற்றும் நீலகிரியில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தின் மண்டல மையம் 12 கோடி ரூபாயில் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
மேலும் சென்னை அருகே பெரும்பாக்கத்தில் 8.48 கோடி ரூபாயிலும், மேட்டுப்பாளையத்தில் 8.29 கோடி ரூபாயிலும் அரசு கலைக்கல்லூரி புதிதாகத் துவங்கப்படும் என அறிவித்துள்ளார்.மேலும் இந்தாண்டுக்குள் 3 துவக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும்,19 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்