October 17, 2016 தண்டோரா குழு
மியான்மர் நாட்டில் சுரங்கத் தொழிலாளர்கள் சிலர் சுமார் 175 டன் எடை கொண்ட பச்சை மாணிக்கக் கற்பாறையைக் கண்டுபிடித்துள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ. 1,100 கோடி என்று கூறப்படுகிறது.
மியான்மரில் சுரங்கத் தொழிலாளர்கள் சிலர் நிலத்தில் தோண்டியபோது, அங்கு, உலகின் மிக விலை உயர்ந்த கற்களில் ஒன்றான பச்சை மாணிக்கக் கல்லைக் கண்டனர். அக்கல்லின் எடை சுமார் 175 டன் என்றும் அதனுடைய மதிப்பு சுமார் ரூ. 1100 கோடி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் வெட்டி எடுக்கப்பட்டு, மெருகேற்றப்படாத அந்தக் கல்லை சீனாவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். அங்கே அந்த விலையுயர்ந்த கல்லைக் கொண்டு ஆபரணங்கள் செய்யவும், கத்திகள், கோடாரிகள், வெட்டும் கருவிகளைச் செய்யலாம்.
மேலும், மியான்மர் அரசுக்கு அந்த மாணிக்கக் கற்களுக்கான உரிய விலையை சீனா வர்த்தகர்கள் அளிக்க உள்ளனர். பச்சை மாணிக்கக் கற்களை விற்பதன் மூலம் மியான்மரின் மொத்த வருவாய் ஈடு செய்யப்படுகிறது.
இந்த மாணிக்கக் கல்லைத் தோண்டி வெளியே எடுத்த சுரங்கத் தொழிலாளர்களுக்கு உரிய சன்மானம் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. பொதுவாகத் தோண்டி எடுக்கப்பட்ட கற்பாறை அரசுக்குச் சொந்தம் என்பதால், தொழிலாளர்களுக்கு அரசு சன்மானம் வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது.