• Download mobile app
30 Nov 2024, SaturdayEdition - 3216
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமைச்சர் ஜெயக்குமாரின் கண்டனத்திற்கு ஆடிட்டர் குருமூர்த்தியின் பதில்

December 26, 2017 தண்டோரா குழு

ஆடிட்டர் குருமூர்த்தியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் ஜெய்குமாருக்கு அவர் பதிலளித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் பழனிச்சாயும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஆண்மையற்றவர்கள் என ஆடிட்டர் குருமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், அவதூறு கருத்து தெரிவித்த பத்திரிகையாளர் குருமூர்த்திக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அப்போது அவர் கூறும்போது, அமைச்சர்கள் அனைவரும் காங்கேயம் காளை போல உள்ளனர்.ஆடிட்டர் குருமூர்த்தி என்ன கிங் மேக்கரா? எதற்கும் ஒரு எல்லை உண்டு. குருமூர்த்தி மீது வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், எந்த முகத்தில் பேசுகிறார் என்பதை ஆடிட்டர் குருமூர்த்தி தெளிவுபடுத்த வேண்டும் அதிமுக கொதித்தெழுந்தால் என்ன நடக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தடித்த வார்த்தை கூற கூடாது, அப்படி இல்லையென்றால் நாங்கள் நூறு வார்த்தை சொல்வோம் எனவும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இதையடுத்து, அமைச்சர் கண்டனத்துக்கு பதிலளித்துள்ள ஆடிட்டர் குருமூர்த்தி தமிழக அரசை நான் இயக்கவில்லை என தெளிவு படுத்திய அமைச்சர் ஜெயக்குமாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல் கட்சிகளும், தலைவர்களும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்துவேன் என்றும் அதிமுக தலைமை பலவீனமானது என்பதை நான் இப்போது புதிதாக கூறவில்லை அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க