October 10, 2017
டெங்கு காய்ச்சலுக்கு முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், சிகிச்சை பெறலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை, புதுப்பேட்டையில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு கூறுகையில்,
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டோருக்கு, முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில், தினமும், 2,000 ரூபாய் வரை சிகிச்சை பெற்று கொள்ளலாம்.
இத்திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள 870 மருத்துவமனைகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் கோவை நகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை மருத்துவமனை நிர்வாகமே வாங்கி கொள்ள வசதி செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.