• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொழுப்பு எவ்வளவு? கண்டுபிடித்துச் சொல்லும் கண்ணாடி.

June 10, 2016 தண்டோரா குழு

நம்மிடம் யாராவது வம்புக்கு வந்தால் நாம் அவர்களிடம் உடனடியாக கேட்பது என்ன கொழுப்பா? என்றுதான். ஆனால் அப்படி இனி யாரிடமும் கேட்கவேண்டியது இல்லை.

அவர்களை ஒரு கண்ணாடி முன் நிறுத்தினால் போதும் அவர்களது உடலில் எந்த இடத்தில் எவ்வளவு கொழுப்பு உள்ளது எனக் கண்டுபிடித்து சொல்லிவிடும்.

இந்த அதி நவீன கண்ணாடி தற்போதுதான் உலக சந்தையை ஆக்கிரமிக்கத்தொடங்கியுள்ளது. தற்போது வளர்ந்த நாடுகளில் மட்டும் கிடைக்கும் இந்தக் கண்ணாடி அதிகளவு சினிமா நட்சத்திரங்கள், உடற்பயிற்சி செய்பவர்கள், ஆணழகன் போட்டியில்கலந்துகொள்பவர்கள் எனக் குறிப்பிட்ட சிலர் மட்டுமே உபயோகப்படுத்தி வருகின்றனர்.

அப்படி அதில் என்ன இருக்கிறது எனக் கேட்பது புரிகிறது. அந்தக் கண்ணாடியின்விளிம்புகளில் உள்ள கருப்புப்பட்டையில் முழுக்க முழுக்க அதி நவீன ஸ்கானர்கள்உள்ளன. மேலும் அந்தக் கண்ணாடி முன் ஒரு எடை மெசினும் உள்ளது.

அந்த எடை மெசின் மீது ஏறி நின்றதும் அது 20 வினாடிகள் சுற்றிவிட்டு நின்றுவிடும். அதற்குள் அந்த
ஸ்கானர்கள் எடை மெசின் மீது நிற்பவர்களை ஒரு இன்சில் 10ல் ஒரு பங்கு அளவிற்குத்
துல்லியமாக ஸ்கேன் செய்து விடும். ஆனால் அதற்கு நாம் உடற்பயிற்சி உடையை அணித்திருக்க வேண்டும்.

பின்னர் அந்தத் தகவல்கள் அனைத்தும் உங்களுடைய போனில் இருக்கும் அப்ளிகேசனுக்கு வந்துவிடும். அதில் உங்களுடைய கை, கால், இடுப்பு, தோள்பட்டை, தொடைப்பகுதி, கணுக்கால் என அனைத்துப் பகுதிகளிலும்உள்ள தசையின் தன்மை, அதில் உள்ள கொழுப்பின் அளவு ஆகியவை தனித்தனியாக கணக்கிட்டுக் காட்டும்.

இதில் சிறப்பம்சம் என்னவென்றால், பழைய முறைப்படி கொழுப்பு அளவைக் கண்டுபிடிக்காமல், சதையில் உள்ள நீரின் அளவை வைத்து அங்குள்ள கொழுப்பு குறித்த தகவல்களை தரும். அதுமட்டுமன்றி கடந்த முறை இருந்த கொழுப்பு எவ்வளவு இந்த முறை அது அதிகரித்துள்ளதா அல்லது குறைந்துள்ளதா என்பதையும் காட்டும். இந்தத் தகவல்கள் அனைத்தும் சேமித்து வைத்துக்கொள்ளும்வசதியும் இருப்பதால் பல பிரபலங்கள் தற்போது இந்தக் கண்ணாடியை வாங்கி
வருகின்றனர்.

இந்த வசதியால் ஆணழகன் போட்டிக்கு தயார் படுத்திக்கொள்பவர்கள்தங்களது உடல் கட்டு நாளுக்கு நாள் எப்படி அதிகமாகிறது என்றோ, அல்லது குறைந்தால் அதை எப்படிச் சமாளிப்பது என்றோ கணக்கிட முடியும் எனத்தெரிவித்துள்ளனர்.

அதே போல் உடலின் அழகையும் திறமையையும் சேர்த்து வைத்திருக்க வேண்டிய நடிகர் நடிகைகள் தங்களது உடல் கட்டை பேணிப் பாதுகாக்க இதைப் பயன்படுத்துவதாகவும் நேக்கட் எகுப்மென்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர்எட் ஸ்கல்ட்டர் தெரிவித்துள்ளார்.

மைன்ட் வாய்ஸ் : அப்படியே கண்ணாடி முன்னாடி நின்னா தொப்பையை மட்டும்கு றைச்சி காட்ற மாதிரி ஏதாவது ஒரு கண்ணாடி தயாரிக்கச் சொன்னீங்கன்னா

இந்தியாவில அதிகமா விற்பனை ஆகும்னு சொல்லவறீங்க தானே………………..

மேலும் படிக்க