• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விரைவில் பூமியில் பாதி காணாமல் போய் விடும்.திகில் கிளப்பும் நிபுணர்கள்

September 8, 2016 தண்டோரா குழு

இப்போது உள்ள உயிரியல் சூழல் தொடர்ந்தால் 2050ல் பாதி உயிரினங்கள் பூமியிலிருந்து அழிந்து போய் விடும் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.வரும் 2030ம் ஆண்டுக்குள் நாம் 80 சதவீத எரிபொருள் சேவையை புதுப்பிக்கக் கூடிய எரிபொருள் மூலத்திற்கு மாற்றி விட வேண்டும்.

இப்போது இருந்தே இயற்கையைக் காக்கும் வேலையைத் தொடங்கி விட வேண்டும். அப்போது தான் நாம் பூமியை காப்பாற்ற முடியும் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.மேலும், 33 வருடங்களில் பூமியிலிருந்து சுமார் 8 லட்சம் உயிரினங்கள் அழிந்து விடும் அபாயம் உள்ளது என்று சுற்றுச்சூழல் நிபுணர், ரீஸ் ஹால்டர் கூறியுள்ளார்.

மேலும், இது குறித்து அவர் பேசுகையில்,மனிதர்கள் பூமியை மிகவும் மோசமான நிலைக்குக் கொண்டு போய் விட்டனர்.தற்போது நாம் புதிய பூகோள உலகுக்குள் நுழைந்துள்ளோம். இன்னும் பல கோடி ஆண்டுகளில் பூமி ஒரு பாறை போலவும் தாவரங்களும், உயிரினங்களும் பாசிகள் போல மாறி விடும் அபாயம் உள்ளது.இதை மாற்ற நாம் மிகப் பெரிய அளவில் இயற்கைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

இனி வரும் காலத்தில் காலநிலை சரியான முறையில் இருக்காது. வெயில் காலத்தில் மழை வரலாம்,மழைக் காலத்தில் வெயில் அடிக்கலாம். இதை யாராலும் மாற்ற முடியாது. இதற்குக் காரணம், நாம் அதிக அளவிலான கரியமில வாயுவை வெளியேற்றி வருவது தான்.அதனால் உணவுப் பாதுகாப்பும் இனி கேள்விக்குறியாகி விடும்.

நமது பூமியைச் சேர்ந்த பல உயிரினங்கள் தொடர்ந்து அழிந்து வருகின்றன. கடந்த 65 மில்லியன் ஆண்டுகளில் நாம் பல ஆயிரம் உயிரினங்களை இழந்துள்ளோம். இதைத் தடுக்க முடியாததால் இது தொடர்கிறது என்று கூறினார்.

மேலும் பேசுகையில், இதே வேகத்தில் போனால் அடுத்த 33 ஆண்டுகளில் நாம் 8 லட்சம் உயிரினங்களை இழக்க நேரிடும் அல்லது பூமியில் பாதி உயிரினங்கள் அழிந்து போகும் அபாயமும் உள்ளது. இதைச் சரி செய்ய வேண்டுமானால் நாம் இயற்கையைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

புதுப்பிக்கக் கூடிய எரிபொருள் மூலங்களுக்கு நாம் மாற வேண்டும். ஆனால் அதைத் தீவிரமாக செய்யத் தேவையான அரசியல் துணிச்சல் நம்முடைய எந்த நாட்டிலும் இல்லை.ஆனால் பூமியை காக்க வேண்டுமானால் நாம் பிழைக்க வேண்டுமானால், உயிரினங்கள் அழியாமல் இருக்க வேண்டுமானால் நாம் இதைச் செய்து தான் ஆக வேண்டும். இதற்கு வேறு வழியில்லை.

இனி வரும் காலத்தில் பூமியில் வெப்ப நிலை அதிகரிக்கும். ஏற்கனவே அது வேகமாக அதிகரித்து வருகிறது.இப்போது எல்லாமே விஷத்தன்மையாக மாறி விட்டது.உலகில் எங்குப் பார்த்தாலும் ஆரோக்கியம் இல்லை.விஷத்தன்மை தான் மிகுந்துள்ளது. அதைச் சரி செய்ய வேண்டிய பொறுப்பு நம் அனைவரிடமும் உள்ளது’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க