February 18, 2017 தண்டோரா குழு
சென்னை:திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே திமுக உறுப்பினர்களுடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.
சட்டப் பேரவையில் எடப்பாடி பழனிச்சாமியின் அரசின் மீது நம்பிக்கை கோரி நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்தும், தனது சட்டை கிழிக்கப்பட்டதை கண்டித்தும் எதிர்க்கட்சி தலைவர்
மு.க.ஸ்டாலின் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து புகார் அளித்தார்.
முன்னர் ஆளுநரைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. உடனே அவர்கள் தர்ணா நடத்தியதை அடுத்து ஆளுநரைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுநரைச் சந்தித்த ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு, மெரினா கடற்கரை அருகே காந்தி சிலை அருகில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டத்தில், திமுக எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டுள்ளனர்.