December 7, 2016
தண்டோரா குழு
மறைந்த மூத்த பத்திரிகையாளர் “சோ” எஸ். ராமசாமியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி “டுவிட்டரில்” இரங்கல் தெரிவித்துள்ளார்.
நாடக, திரைப்பட நடிகரும், “துக்ளக்” பத்திரிகை ஆசிரியருமான “சோ” உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் புதனன்று (டிசம்பர் 7) அதிகாலையில் உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “சோ சிறந்த தேசியவாதி. அச்சமின்றி பேசக்கூடியவர். பன்முகத் தன்மை கொண்டவர். வெளிப்படை தன்மையுடன் பேசக் கூடியவர். சிறந்த அறிவாளி. எல்லாவற்றிற்கும் மேல் அவர் எனது நெருங்கிய நண்பர்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சோவைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் துக்ளக் வாசகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.