October 11, 2016 தண்டோரா குழு
பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாளும் விடுமுறை எடுக்காமல் 24 மணி நேரமும் பணியில் இருப்பதாக தகவல் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது.
தகவல்அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பிரதமர் விடுமுறை எடுப்பதற்கான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் ஏதும் உள்ளதா என கேள்வி கேட்கப்பட்டது.
பிரதமர் அலுவலகம் தரப்பில் இதற்கு அளித்த பதிலில், பிரதமர் 24 மணி நேரமும் பணியில் உள்ளார் என்றே கூறலாம், பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு இதுவரை அவர் எந்த விடுமுறையும் எடுக்கவில்லை என பிரதமர் அலுவலகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதைபோல் தகவல் அறியும் சட்டத்தின் கீழ், முன்னாள் பிரதமர்களான மன்மோகன் சிங், வாஜ்பாய், தேவகவுடா, குஜ்ரால், நரசிம்மராவ், சந்திரசேகர். விபி சிங் மற்றும் ராஜிவ் காந்தி ஆகியோர் பிரதமராக இருந்த போது விடுமுறை எடுத்துள்ளார்களா? இதற்கு ஆவணங்கள் உள்ளதா? என கேள்வி எழுப்பட்டது. இந்த கடிதம் முதலில் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் அலுவலம், முன்னாள் பிரதமர்கள் விடுமுறை எடுத்தது பற்றிய ஆவணங்கள் இங்கு இல்லை. இது தொடர்பான ஆவணங்களை பிரதமர் அலுவலகத்திலும் இல்லை கூறப்பட்டுள்ளது.