• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மோடி தனது எல்லையைத் தாண்டிவிட்டார் பாகிஸ்தான் குற்றச்சாட்டு

August 19, 2016 தண்டோரா குழு

இந்திய சுதந்திர தினத்தின் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய போது பலோசிஸ்தான் பற்றி அவர் பேசியதின் மூலம், தனது எல்லையை இந்தியா தாண்டிவிட்டது என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நஃபீஸ் ஜகாரியா குற்றம்சாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியும் இந்தியாவுக்கே சொந்தம் என்று பிரதமர் மோடி சமீபத்தில் கூறிய கருத்து பாகிஸ்தானில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நஃபீஸ் ஜகாரியா அளித்த பேட்டியொன்றில் பாகிஸ்தானின் கோபம் தெரிந்தது.
இதைக்குறித்து நஃபீஸ் ஜகாரியா பேசுகையில், பலோசிஸ்தான் பற்றி இந்திய பிரதமர் பேசிய தன் மூலம், ஐ.நா. நெறிமுறைகளை இந்தியா மீறியுள்ளது.

மோடி தனது எல்லையைத் தாண்டி பேசியுள்ளார் என்றும் காஷ்மீரில் நடக்கும் அத்துமீறல்கள் குறித்து அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐ.நா பொதுக்குழு கூட்டத்தில் இதைகுறித்து பேசும் சூழ்நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், காஷ்மீரில் இந்தியா நடத்திவரும் மனித உரிமை மீறல்களை மூடி மறைக்கவே அந்நாடு பலோசிஸ்தான் விவகாரத்தைப் பேச ஆரம்பித்துள்ளது.

காஷ்மீரில் சுமார் 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 100க்கும் மேற்பட்டவர்கள் பெல்லட் துப்பாக்கிச் சூட்டால் கண் பார்வையை இழந்துள்ளனர். இதை பாகிஸ்தான் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஆம்னஸ்டி அமைப்புக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதில் இருந்தே, இந்தியாவின் மனிதாபிமான விஷயத்தைத் தெரிந்து கொள்ள முடியும் என்று ஜகாரியா தெரிவித்தார்

மேலும் படிக்க