June 10, 2016
தண்டோரா குழு
பிரதம மந்திரி மோடி நல்லிணக்கத்தை நிலைநாட்டவும், இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சமீபமாக அமெரிக்கா சென்று திரும்புகையில் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பல கோடி டாலர் மதிப்புள்ள புராதனமான சிற்பங்கள், சிலைகள், தொன்மையான பொருட்கள் ஆகியவற்றைத் திரும்பக் கொண்டுவந்துள்ளார்.
கிட்டத்தட்ட 200 பொருட்கள் சட்டத் தலைமைப் பணி முதல்வர் லாரீடா.இ.லின்ச்என்பவரால்மோ டியிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவற்றில் முக்கியமானவை: 1600 பவுண்டு எடையுள்ள 5 அடி உயரமான புத்தர் சிலை; 500 பவுண்டு எடையுள்ள ஆளுயர சிலை; 2.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள உமா பார்வதியின்வெ ண்கலச்சிலை; இந்துக்களின் மறை ஞானியான மானிக்கவிசாகவர்; 850 – 1250 காலத்து சோழநாட்டுக்கவி; 1000 வருடத்திற்கு முற்பட்ட வினாகயர் சிலை; 5 வது சோழர் கால பார்வதியின்சி ற்பம்மே லும் சென்னையிலுள்ள சிவன் கோயிலில் இருந்து திருடப்பட்ட 1.5 மில்லியன் டாலர்மதிப்புள்ள இன்ன பிற சிற்பங்கள்.
இவற்றில் பெரும்பாலான சிற்பங்களும், சிலைகளும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவையாகும். 2007ம் ஆண்டு இந்திய வருவாய் புலனாய்வு இயக்குநர் அமைப்பு, நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சிலை கடத்தல் பற்றிய செய்தியை அனுப்பி அமெரிக்காவின்துணையை நாடுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
சுபாஷ் கபூர் என்பவர் தொன்மையான சிலைகளையும், சிற்பங்களையும் பல நாடுகளிலிருந்தும் கடத்தி அமெரிக்காவிலுள்ள, பழமைக் கலைக்கூடம் என்று பெயரிட்ட தன்னுடைய மையத்தில் சேகரிப்பார்.
பிறகு அவற்றை அருங்காட்சியகம், மற்றும் அரியப் பொருள் சேகரிப்போர்போன்றவர்களுக்கு விற்றுவிடுவார். இவர்கள் அதன் பழமைத் தன்மையை மாற்றும்விதமாகப் பல மேற்பூச்சுக்களைப் பூசித் தோற்றத்தை மாற்றிவிடுவர்.
2007ம் ஆண்டு DRI அமைப்பு அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு புலனாய்வு அமைப்புக்கு (HSI) ஒரு செய்தி அனுப்பியது. அதாவது கப்பல் வழியாக 7 பெட்டிகளில்அமெரிக்காவிற்குப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. அப்பெட்டியின் மேல் பளிங்குத்தோட்டத்திற்குச் செல்லவேண்டிய மேசை சாமான்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்என்று துப்பு தெரிவித்தது. அவை அனைத்தும் இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட பழமையான சிற்பங்களே, அவற்றை மீட்க உதவியும் கோரியுள்ளது.
இந்தச் செய்தியின் அடிப்படையில் HSI விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. அதற்கு ஆப்பரேஷன் ஹிடன் ஐடல் என்று பெயரிட்டது. குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கத்துறை(ICF) அமெரிக்க வழக்கறிஞர்களின் அலுவலகங்கள், சர்வதேச விவகார நீதிபதி அலுவலகம்(JIA) ஆகிய பல அமைப்புகளும் இந்தத் தேடலில் முனைந்துள்ளது.
சுபாஷ் கபூரின் வியாபார மையத்திலும், அருங்காட்சியகத்திலும், மற்றும் தொல்பொருள்சே கரிப்போரிடமும் தேடுதல் வேட்டை நடை பெற்றுள்ளது. அவ்விதம் கைப்பற்றப்பட்ட பொருள்களை, இந்தியாவிற்குச் சொந்தமானவை தான் என்பதைத் தகுந்த ஆய்வில் உறுதி செய்த பின் பிரதமர் மோடியிடம் ஒப்படைத்துள்ளனர்.
தேடுதல் வேட்டை இன்னும்தொடரும் என்றும் கூறியுள்ளனர். இந்தக் கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் இப்பொழுது சென்னை சிறையில்விசாரணைக்காக அடைக்கப்பட்டுள்ளார். உலகிலேயே மிகப்பெரிய சிலைக்கடத்தல்காரன் என்றே இவரைக் கூறலாம்.
2011ம் ஆண்டு ஜெர்மனியின் ஃவ்ராங்க்வ்ரெட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கைது செய்யப்பட்டு இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். இங்கு தற்பொழுது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.