• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஹரியானா நிர்வாண சாமியார் விவகாரம். ஆம் ஆத்மி கட்சியில் சர்ச்சை

August 29, 2016 தண்டோரா குழு

ஹரியானா மாநிலத்தின் சட்டசபையில் நிர்வாணமாக வந்து உரை நிகழ்த்திய ஜெயின் சாமியார் தருண் சாகரை ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளரும் பிரபல இசை அமைப்பாளருமான விஷால் தத்லானி தனது டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்ததால் அவருக்கு எதிராகப் போராட்டங்கள் எழுந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஹரியான மாநில சட்டசபையில் அம்மாநில கல்வித்துறை அமைச்சரின் அழைப்பை ஏற்று ஜெயின் சாமியார் உரை நிகழ்த்தினார்.மேலும்,அவர் முழு நிர்வாணமாக வந்ததால் அங்கு பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

இதனையடுத்து ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளரும், பிரபல இசையமைப்பாளருமான விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் அவரைக் கடுமையாக விமர்சித்தார்.அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் சாமியாரின் நிர்வாண கோலத்தை விமர்சித்ததோடு மட்டுமல்லாமல் மோடி அரசைக் கடுமையான முறையில் விமர்சித்து கருத்து பதிவிட்டிருந்தார்.

பிறகு தான் பதிவு செய்ததை நீக்கிவிட்டார்.ஒரு பக்கம் ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளராக இருந்து கொண்டு இச்செயலைக் கண்டிக்கிறார் விஷால்.மறுபக்கம் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜெயின் சாமியார் தருண் சாகரை புகழ்ந்து டிவிட்டரில் கருத்து பதிவு செய்திருக்கிறார்.

அதில் அரவிந்த் கெஜ்ரிவால்,தருண் சாகர் சுவாமியைக் கடந்த வருடம் நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.அவர்களின் சொற்பொழிவுகளை எங்கள் குடும்பத்தினர்கள் தொடர்ந்து தொலைக்காட்சியில் பார்த்து வருகிறோம்.அவரையும் அவரது எண்ணங்களையும் நாங்கள் மதித்து நடக்கிறோம் என்று கூறியுள்ளார்.

தருண் சாகர் பெரும் மதிப்பளிக்க வேண்டிய துறவி என்றும், ஜெயின் சமூகத்தினர் மட்டும் அல்ல எல்லாச் சமூகத்தினருக்கும் அவர் ஒரு சிறந்த துறவி.அவரை விமர்சிப்பது என்பது துரதிஷ்டவசமானது.அவ்வாறு செய்பவர்கள் அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மேலும்,ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலின் இந்தக் கருத்திற்கு பிறகு மீண்டும் டிவிட்டரில் கருத்து பதிவு செய்த விஷால் தன்னுடைய முந்தைய கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.தன்னுடைய வார்த்தைகளால் தனது ஜெயின் நண்பர்கள் யாரேனும் காயப்பட்டிருந்தால் அதற்காகத் தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும்,இனி அரசியலை விட்டு விலகி தூரமாக செல்லப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அதே போல்,விஷாலின் இந்தக் கருத்துக்கு ஆம் ஆத்மி கட்சியின் மூத்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தன்னுடைய ஜெயின் சமூக மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

மேலும் படிக்க