• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவில் கடந்த ஆண்டு எத்தனைக் கோடி மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது

September 1, 2016 தண்டோரா குழு

நாடு முழுவதும் கடந்த ஆண்டு மட்டும் நடந்த பல்வேறு கொள்ளைச் சம்பவங்களினால் 8,210 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தேசிய குற்றப் பதிவு ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள 36 மாநிலங்கள், யூனியன் மற்றும் 53 க்கும் மேற்பட்ட 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட மெகா நகரங்களில் கடந்த 2015ம் ஆண்டு நடந்த கிரிமினல் வழக்குகள் பதிவு அடிப்படையில் தேசிய குற்றப் பதிவு ஆணையம் ஒரு அறிக்கையைத் தயாரித்துள்ளது.இதனை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.

அந்த அறிக்கையில்,கடந்த 2015ம் ஆண்டில் பதிவான புகார்களில் அடிப்படையில் கொள்ளை சம்பவத்தினால் மட்டும் 8,210 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றிலிருந்து வெறும் 1,350 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,2014ம் ஆண்டை விட 2015ம் ஆண்டில் 9.3 சதவிகிதம் கொள்ளைச் சம்பவங்களை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.அதே போல இந்தக் கொள்ளை போன பொருட்களில் கிட்டத்தட்டப் பாதியளவு அதாவது 4,533 கோடி ரூபாய் மகாராஷ்டிரா மாநிலம் தான் பறி கொடுத்துள்ளது.அதிலும் சிறிய அளவே போலீஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களை விடத் தமிழகத்தை பொருத்தவரை கொள்ளை போன பொருட்களில் மதிப்பு 131 கோடி ரூபாய் எனவும், அதில் 65.4 சதவீத பொருட்கள் போலீஸாரால் மீட்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.56.2 சதவீதம் பஞ்சாப் அரசும், 52% ராஜஸ்தான் அரசும் பறிமுதல் செய்துள்ளது.

இதன் மூலம் தமிழகம் கொள்ளைப் பொருட்களை மீட்பதில் முதலிடம் வகிக்கிறது.2014ம் ஆண்டைக் காட்டிலும், 2015ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 5.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது.அதாவது 2014ம் ஆண்டு 89,423 இருந்த குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் 2015ம் ஆண்டு 94,172 என அதிகரித்துள்ளது.

அதிலும் 44.5 சதவிகித வழக்குகள் குழந்தை கடத்தல் தொடர்பானதாகும்.அதே சமயம்,பெண்களுக்கு எதிரான குற்றங்களும்,சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளதாகத் தேசிய குற்றப் பதிவு ஆணையத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.எனினும் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க