• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இறந்த மகனின் நினைவாக 5 ஆண்டுகளாக உணவு வழங்கும் பெற்றோர்கள்

October 25, 2017 தண்டோரா குழு

மும்பை நகரில் ரயில் விபத்தில் பலியான மகனின் நினைவாக,ஒரு தம்பதியினர் கடந்த 5 ஆண்டுகளாக மூத்த குடிமக்களுக்கு இலவச உணவை வழங்கி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரை சேர்ந்தவர்கள் பிரதீப்-தமயந்தி தம்பதியினர். கடந்த 2011ம் ஆண்டு நடந்த ரயில் விபத்தில், இவர்களுடைய மகன் நிமேஷ் பலியானார். மகனின் பிரிவால் இந்த தம்பதியினர் மிகுந்த மனவேதனைக்கு ஆளானார்கள்.

இந்நிலையில், இறந்த மகனின் நினைவாக ஏதாவது செய்யவேண்டும் என்று முடிவு செய்தனர். அதன்பிறகு, பிள்ளைகளால் கைவிடப்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் பணியை தொடங்கி, கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த சேவையை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து தமயந்தி கூறுகையில், “தினமும் தங்கள் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள்,அல்லது எங்களை போல் பிள்ளைகளை இழந்த சுமார் 11௦ முதியவர்களுக்கு இலவச மதிய உணவை வழங்கி வருகிறோம். மேலும், பழங்குடி மக்கள் வசித்து வரும் பகுதிகளிலிருக்கும் குழந்தைகளுக்கு தேவையான உடைகள், புத்தகங்கள், மற்றும் ஸ்டேசனரி பொருட்களை வழங்கி வருகிறோம்.” என்று கூறினார்.

இதுகுறித்து பிரதீப் கூறுகையில், “மகனை இழந்த நிலையில் நாங்கள் நொறுங்கி போனோம். அடுத்து என்ன செய்வதென்று என்று எங்களுக்கு தெரியவில்லை. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, எனது மனைவி தான் இந்த பணியை செய்ய யோசனை கொடுத்தார்.இந்த பணியை கடந்த 5 ஆண்டுகளாக செய்து வருகிறோம்” என்று கூறினார்.

இறந்த மகனின் நினைவாக தன்னலமற்ற சேவை செய்து வரும் இந்த தம்பதியினரை, அப்பகுதி மக்கள் மனமார பாராட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க