January 9, 2018 தண்டோரா குழு
மும்பையில் பெண் ஊழியர்கள் மட்டும் பணிபுரியும் மாதுங்கா ரயில்நிலையம் லிம்கா உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
மகாரஷ்டிரா மாநிலத்தின் மாதுங்கா ரயில்நிலையத்தில் பெண் ஊழியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றன. அந்த ரயில்நிலையத்தின் மேலாளர் மம்தா குல்கர்னி மேற்பார்வையின் கீழ் சுமார் 41 பெண் ஊழியர்கள்பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த 2017ம் ஆண்டு, ஜூலை மாதம் முதல், பெண் ஊழியர்களால் பிரத்தியேகமாக இந்த ரயில்நிலையம் செயல்பட்டு வருகிறது.மாதுங்காவில் பெண் ஊழியர்களை மத்திய ரயில்வே நியமித்து,சுமார் ஆறு மாதங்களுக்குப் பின்னர்,2018ம் ஆண்டிற்கான லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றுள்ளது.
மாதுங்கா ரயில்வே ஊழியர்கள் தங்கள் கடமைகளை கண்ணும் கருத்துமாக செய்து வந்து வந்தனர். அவர்களுடைய கடின உழைப்பு நல்ல பலனை தந்துள்ளது என்று மத்திய ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி கூறினார்.