January 9, 2018 தண்டோரா குழு
திரையரங்குகளில் தேசிய கீதம் பாடுவது கட்டாயம் என அனைத்து திரையங்கிற்கும் உச்சநீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்திரவிட்டது.இதையடுத்து, நாட்டுப்பற்றை வளர்ப்பதற்காக தியேட்டர்களில் படம் போடுவதற்கு முன்பு தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.
இதற்கிடையில், இது தொடர்பாக பாஜகவின் அஸ்வினி உபத்யாயா சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து திரையரங்குகளில் தேசிய கீதம் பாடுவது கட்டாயம் என்ற உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.
மத்திய அரசின் தகவலையடுத்து உச்சநீதிமன்றம் திரையரங்குகளில் தேசிய கீதம் பாடுவது கட்டாயமில்லை என உத்தரவிட்டுள்ளது.