• Download mobile app
20 Apr 2025, SundayEdition - 3357
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புது டெல்லியில் பெண் மருத்துவர் தற்கொலை

September 17, 2016 தண்டோரா குழு

புது டெல்லியில் உள்ள பிரபல எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராக இருக்கும் ஒருவர் குடும்ப பிரச்சனை காரணமாக விஷ ஊசியை பயன்படுத்தி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

புது டெல்லியில் உள்ள கிழக்கு பகுதி ஐ.பி. விரிவாக்கம் குர்மஞ்சால் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பிரஜேஷ். அவருடைய மனைவி டாக்டர் ரித்து பங்கோட்டி(30). அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அவர், தனக்குத்தானே விஷ ஊசி போட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்துக்கொண்ட மருத்துவருக்கும் ஏர் இந்திய விமான ஓட்டுனராக இருக்கும் அவருடைய கணவர் பிரஜேசுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வந்ததாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.

டாக்டர் ரித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவத்தை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவருடைய உடலுக்கு அருகே ரித்து தற்கொலை செய்வதற்கு முன் எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டது.

மேலும், அவருடைய கணவரை கைது செய்து அவரிடம் போலீசார் பல மணிநேரம் விசாரணை நடத்தினார்கள். கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை அதிகாரிகள் கூறினர்.

தற்கொலை செய்து கொண்ட டாக்டர் ரித்துவுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. அவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளதாகவும் டெல்லி டிசிபி ரிஷிபால் தெரிவித்தார்.

மேலும் படிக்க