• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தில்லி விமான நிலையத்தில் ரூ. 5௦ லட்சம் புது நோட்டுகள் பறிமுதல்

December 23, 2016 தண்டோரா குழு

புது தில்லி சர்வதேச விமான நிலையத்தில் 5௦ லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

5௦௦ மற்றும் 1,௦௦௦ ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, மக்கள் அவற்றை வங்கிகளில் செலுத்தி வருகின்றனர். ஆனால், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், ஆகியோர் புதிய ரூபாய் நோட்டுகளைப் பதுக்குவதாகப் புகார்கள் வந்தன. இதனை அடுத்து இந்தியா முழுவதும் சோதனை நடைபெற்று வருகிறது. ரூபாய் நோட்டுகள் கடத்தல் குறித்து விமான நிலையங்கள் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஒருவரை மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையினர் (CISF), சந்தேகத்தின் அடிப்படையில் வியாழக்கிழமை (டிசம்பர் 22) சோதனை செய்தனர். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த 5௦ லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து விமானநிலைய அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

“இரவு 2.3௦ மணியளவில் நைஜீரியா நாட்டை சேர்ந்த ஒருவர் விமான நிலையத்திற்கு வந்தார். அவருடைய நடவடிக்கை சந்தேகம் ஏற்படுத்தியது. மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை அதிகாரி அவரை இடைமறித்து விசாரணை செய்தார். விசாரணையில், அவர் புது தில்லியில் இருந்து கோயம்புத்தூருக்குப் பயணம் செய்கிகிறார் என்பது தெரியவந்தது.

அவரிடம் இருந்து 53.78 லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளும், 4.29 லட்சம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து நாங்கள் விமான உளவுத்துறை மற்றும் சுங்கத்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளோம். அந்த நபர் தனியார் விமானம் மூலம் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது”

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

மேலும் படிக்க