November 22, 2017 தண்டோரா குழு
நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா இருக்கும் வீடியோ 2010ல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்திய நிலையில் வீடியோ காட்சிகள் உண்மை தான் என டெல்லி தடவியல் ஆய்வகம் தெளிவுப்படுத்தியுள்ளது.
நித்யானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் கடந்த 2010ல் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆனால், வீடியோவை தனது சீடர்கள் சிலரே சித்தரித்து வெளியிட்டதாகவும், அதனைக் கொண்டு பணம் கேட்டு மிரட்டியதாகவும் நித்யானந்தா பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் லெனின் கருப்பன், ஆர்த்தி ராவ், ஐயப்பன் என்பவர்கள் உள்ளிட்ட சிலர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில்,நடிகை ரஞ்சிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் போலீசார் நகல் வீடியோவைக் கொண்டு விசாரணை நடத்துவதாகவும், காட்சிகள் சித்தரிக்கப்பட்டவை என்பதைக் கண்டறிய உண்மையான வீடியோவைக்கொண்டு விசாரணை நடத்த உத்தரவிடுமாறும் கோரியிருந்தார்.
இதனையடுத்து, பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்ற இது தொடர்பான ஒரு வழக்கில், வீடியோவை தடயவியல் சோதனைக்கு உட்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் பேரில் அந்த வீடியோ டெல்லியில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், அந்த வீடியோ உண்மையில் எடுக்கப்பட்டதுதான் என்றும் அதில் வீடியோவில் இருப்பது நித்யானந்தா தான் என டெல்லி தடவியல் ஆய்வகம் உறுதிபடுத்தியுள்ளது.