• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கார்டு தேய்க்கும் கருவிக்கான வாடகை 2017 மார்ச் வரை ரத்து – இந்தியன் வங்கி

November 23, 2016 தண்டோரா குழு

டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துவதற்காக வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கார்டு தேய்க்கும் கருவிக்கான வாடகை 2017ம் ஆண்டு மார்ச் வரை ரத்து செய்யப்படுவதாக இந்தியன் வங்கி அறிவித்துள்ளது.

இது குறித்து இந்தியன் வங்கி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துள்ளதால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை அதிகரிக்கும் வகையில், பொதுமக்கள் வங்கி டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துவதற்கு வசதியாக இந்தியன் வங்கி சிறப்பு முகாம் தொடங்கியுள்ளது.

இதன்படி, டெபிட் கார்டுகளை பயன்படுத்துவதற்காக வியாபாரிகளுக்கு கார்டு தேய்க்கும் (பிஓஎஸ்) கருவியை இந்தியன் வங்கி வாடகைக்கு வழங்கியுள்ளது. இக்கருவிகளுக்கான வாடகை 2017 மார்ச் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

டெபிட் கார்டு சேவையை வியாபாரிகள் பயன்படுத்துவதற்காக விதிக்கப்படும் ‘எம்டிஆர்’ (மெர்ச்சன்ட் டிஸ்கவுன்ட் ரேட்) கட்டணமும் டிசம்பர் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
ஸ்கேன் அண்ட் பே’ என்ற திட்டத்தின் மூலம், ‘இந்த்பே’ என்ற செயலியை (IndPay App) பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இந்த தொகையைக் கடையில் பணமாகச் செலுத்தத் தேவையில்லை.

அதற்குப் பதிலாக, கடைக்காரரிடம் இருக்கும் க்யூஆர் கோடு (QR Code) கறுப்பு வெள்ளை கட்டங்களை செயலி வழியாக ஸ்கேன் செய்து, உரிய பணத்தை டைப் செய்தால், வியாபாரியின் வங்கிக் கணக்குக்கு அத்தொகை நேரடியாகச் சென்றுவிடும். உடனே கடைக்காரர், வாடிக்கையாளர் ஆகிய இருவருக்கும் குறுந்தகவலும் வந்துவிடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க