• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒபாமாவிற்கு கடிதம் எழுதிய ஆறு வயது சிறுவன்

September 23, 2016 தண்டோரா குழு

சீரியா நாட்டின் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட ஒம்ரான் டக்நீஷ் எனும் மூன்று வயது சிறுவனை அமெரிக்காவிற்கு அழைத்து வருமாறு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிற்கு ஆறுவயது சிறுவன் கடிதம் எழுதியுள்ளான்.

சீரியா நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். மேலும் பொருள் சேதமும் அதிகமாக அடைந்துள்ளது. அப்போரை நிறுத்த வழியில்லாமல் உலகமே ஸ்தம்பித்துள்ளது. அங்கு இருந்து உயிர் தப்பிய மக்கள் அகதிகளாக பல நாடுகளுக்கு புலம் பெயர்ந்துள்ளன. தங்கள் நாட்டில் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை மீண்டும் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பி சென்றுவிட்டனர்.

அப்போரின் போது,காயமடைந்த மூன்று வயது சிறுவனாகிய ஒம்ரானின் புகைப்படம் உலக மக்களின் இருதயத்தை உருக்கியது. தன் தாய், தந்தை, சகோதர, சகோதரிகளுடன் வாழ்ந்து வந்த அச்சிறுவன், விமான தாக்குதலின்போது ஒரே நொடியில் அவர்கள் அனைவரையும் இழந்தான்.

இடிந்து விழுத்த அவனுடைய வீட்டின் இடிப்பாடுகளில் சிக்கி இருந்த அவனை மீட்பு படையினர் காப்பாற்றினர். என்ன நடந்தது என்று ஒன்றும் புரியாமல், அழத்தெரியாமல், உடம்பில் ரத்தக்காயங்களுடன் அமைதியாக இருந்த ஒம்ரானின் புகைப்படம் சமுக வலைதளங்களில் வைரலாக பரவி, பார்ப்போர் இதயங்களை உருக்கியது.

சீரியா நாட்டின் மீது மற்ற நாடுகள் நடத்திய வான்வழி தாக்குதலில் குடும்பத்தை இழந்து, ரத்தக்காயங்களுடன், அமைதியாக இருந்த அந்த சிறுவனின் புகைப்படம் நியூயார்க் நகரில் வசிக்கும் ஆறு வயது சிறுவன் அலெக்ஸ்ன் மனதை தொட்டது. உடனே அவன் ஒம்ரானை அமெரிக்காவிற்கு அழைத்து வருமாறு ஜனாதிபதி ஒபாமாவுக்கு கடிதம் எழுதினான்.

சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிற்கு ஆறுவயது சிறுவன் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அக்கடிதத்தை பார்த்த அவருக்கு அச்சிறுவன் எழுதிய செய்தி ஆச்சரியத்தை அளித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அகதிகள் உச்சி மாநாட்டில் அக்கடிதத்தை வாசித்து காட்டினார் ஒபாமா.

ஒம்ரானை அழைத்துக்கொண்டு எங்கள் வீட்டிற்கு உங்களால் வர முடியுமா? உங்களுக்காக கொடிகள், பலூன்கள், மற்றும் மலர்களுடன் நாங்கள் காத்துக்கொண்டு இருப்போம். நாங்கள் அவனுடைய குடும்பத்தினர், அவன் எங்கள் சகோதரன். அலெக்ஸ்ன் சகோதரி கேத்ரின் அவனுக்காக பட்டாம்பூச்சிகள் மற்றும் மின்மினி பூச்சிகளை பிடித்து வைத்திருப்பாள் என்று அக்கடிதத்தில் கூறியிருந்தான்.

மேலும், என்னுடைய பள்ளியில் எனக்கு சீரியா நாட்டை சேர்ந்த ஒரு நண்பன் உண்டு. அவனுடைய பெயர் ஓமர். எனது நண்பனை ஒம்ரானுக்கு அறிமுகம் செய்துவைப்பேன். நாங்கள் அனைவரும் ஒன்றாக விளையாடுவோம். அவனிடம் விளையாட்டு பொருள்கள் இருக்காது. பரவாயில்லை, என் சகோதரி அவளிடம் உள்ள நீல நிற பெரிய முயல் பொம்மையை பகிர்ந்துக்கொள்வாள்.அவன் எங்களுக்கு ஒரு புதிய மொழியை சொல்லிக்கொடுப்பான். ஜப்பான் நாட்டிலிருந்து வந்துள்ள என்னுடைய மற்றொரு நண்பன் ஆடோவுக்கு ஆங்கிலம் கற்றுத்தருவது போல் அவனுக்கு கற்றுத்தருவோம்.

கணித பாடத்தில் உள்ள கூட்டல், கழித்தல் கணக்குகளை நான் அவனுக்கு சொல்லித்தருவேன். என்னுடைய இரண்டு சக்கர வண்டியை அவனுடன் பகிரிந்துக்கொண்டு,அவ்வண்டியை எப்படி ஓட்டுவது என்று அவனுக்கு கற்றுத்தருவேன். என் சகோதரியின் பச்சை நிற இதழ் பொலிவை முகர்ந்து பார்க்கலாம். அவள் யாரையும் தொட விடமாட்டாள். உன் வரவுக்காக காத்துக்கொண்டு இருப்பேன் என்று அலெக்ஸ் அவனுடைய கடிதத்தில் எழுதியிருந்தான்.

அலெக்ஸ் எழுதிய அக்கடிதத்தை ஜனாதிபதி ஒபாமா மனமார பாராட்டினார். மேலும் அக்கடிதத்தை ஐக்கிய நாடுகள் அகதிகள் உச்சி மாநாட்டிற்கு வந்துள்ள தலைவர்களுடன் பகிர்ந்துக்கொண்டார்.

மேலும், நாம் இந்த சிறுவனிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்கிறோம். மற்றவர்களை குறித்த பயமோ, எந்த நாட்டை சேர்ந்தவர்களோ, எந்த இனத்தை சேர்ந்தவர்களோ, எப்படிப்பட்ட கடவுள் நம்பிக்கை கொண்டவர்களோ என்று யோசிக்காமால் மனிதாபிமானம் மட்டுமே முக்கியம் என்று கருதும் இந்த சிறுவனிடம் இருந்து நிறைய விஷயங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒபாமா தெரிவித்தார்.

மேலும் படிக்க