• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒன்றரை வயதுக் குழந்தை வயிற்றில் 3 கிலோ எடையுள்ள சிசு

August 8, 2016 தண்டோரா குழு

ஒன்றரை வயதுக் குழந்தை வயிற்றில் இருந்த 3 கிலோ எடையுள்ள சிசுவை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர்.ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜு கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் நிஷா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் குழந்தைக்கு சில மாதங்களாக வயிறு வீங்கியபடி காணப்பட்டது.

இதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர்கள் அங்கு ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது, குழந்தையின் வயிற்றில் சிசு வளர்ந்து இருப்பது தெரியவந்தது. மேலும், கல்லீரல் மற்றும் மண்ணீரல் ஆகியவை இடம் மாறி இருப்பதையும் மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.

இதையடுத்து மருத்துவர் விஜயகிரி தலைமையிலான குழுவினர் நேற்று இரண்டு மணி நேரம் நிஷாவுக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்து 3 கிலோ எடையுள்ள கட்டியை அகற்றினர். அக்கட்டியில் குழந்தையின் முடி தாடை எலும்புகள் உள்ளிட்டவை இருந்தன. மேலும், அறுவை சிகிச்சைக்கு பிறகு நிஷா ஆரோக்கியத்துடன் இருப்பதாகக் குழந்தையின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் விஜயகிரி கூறும்போது,தாயின் வயிற்றில் இரட்டைக்கரு உருவாகும் போது அதில் ஒரு குழந்தை மற்றொரு குழந்தையை அரவணைத்து குழந்தையின் வயிற்றில் உள்ளடங்கி குழந்தையாக உருமாறியிருக்கிறது. இதனை ஆங்கிலத்தில் டுவிண்டெரி எனக் கூறுவார்கள் என்றார்.

மேலும், கருத்தரிக்கும் 10 லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே இது போன்ற விசித்திரமான நிகழ்வு நடைபெறும் என்றும் உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் குழந்தை வயிற்றில் இருந்த பனிக்குடம் உடைந்து அக்குழந்தையின் உயிருக்கு ஆபத்தாக முடிந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க