• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தொடரும் ஒருதலைக் காதல் கொலைகள்

September 1, 2016 தண்டோரா குழு

தமிழகத்தில் காதலிக்க மறுக்கும் பெண்களை கொலை செய்யும் பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது.இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.அது குறித்த ஒரு அலசல் தான் இந்தக் கட்டுரை.

சமீப காலமாக முதன் முதலில் ஒருதலைக் காதலால் பாதிக்கப்பட்டது சென்னை சுவாதி.இவர் தன்னுடைய காதலை ஏற்க மறுத்ததால் அரிவாளால் வெட்டிக் கொன்றதாக காவல்துறையினர் ராம்குமார் என்ற இளைஞரைக் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த சக மாணவியை ஒருதலையாகக் காதலித்த இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவன் வகுப்பறையில் வைத்தே கட்டையால் அடித்துக் கொன்றுள்ளார்.இந்நிலையில்,நேற்று பள்ளி ஆசிரியை ஒருவர் தன்னை காதலிக்கவில்லை என்பதால் தூத்துக்குடியில் கிறுத்துவ ஆலயத்திற்கு உள்ளேயே சென்று அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளான் ஒரு கொடூர மனம் கொண்டவன்.

இந்த இரண்டு நாட்களுக்குள் மட்டும் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடைபெற்றது தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இது குறித்து கடந்த ஐந்து ஆண்டுகளாகக் காதலித்து வரும் ஜோடியான,ஜீவா,பாவனா ஆகியோர் கூறும் போது,நாங்கள் இருவரும் ஒரே கல்லூரியில் படித்தோம்,ஜீவா அப்போதே என்னிடம் காதலை தெரிவித்தார்.ஆனால் நான் மறுத்துவிட்டேன்.அதற்காக மனம் தளராக அவர் பின்னர் பல்வேறு வகையில் என்னை இம்ப்ரெஸ் செய்ய முயன்றார்.அப்போது அவரிடம் நீங்கள் ஒரு நல்ல வேளையில் சேர்ந்த பிறகு என்னிடம் காதலைச் சொன்னால் ஏற்றுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தேன்.

இதையடுத்து இறுதியாண்டு படித்த அவர் தன்னுடைய சுய முயற்சியால் ஒரு மென்பொருள் நிறுவனத்தைத் துவக்கி இன்று சுமார் 50 பேர் அதில் வேலை செய்து வருகின்றனர்.இப்போது எனக்கு அவரைக் காதலிப்பதில் எந்த ஒரு எதிர்ப்பும் கிடையாது.அதே போல நான் அவரை உதாசீனப்படுத்தும் போதும் அவர் என் மீது அதிக அன்பைக் காட்டினார்.அதற்காகவே அவரை எனக்குப் பிடித்திருந்தது எனப் பாவனா தெரிவித்தார்.

எந்த ஒரு பெண்ணும் காரணம் இன்றி ஒருவரை வெறுக்கமாட்டாள்.அதற்கான காரணத்தை கண்டுபிடித்து அந்தக் குறையை நிவர்த்தி செய்தாலே போதும் நாம் அந்தப் பெண்ணின் மனதை வென்றுவிடலாம்.அதை விடுத்து அவளைக் கொள்வது,துன்புறுத்துவது இவை அனைத்தும் தேவையற்றது என ஜீவா தெரிவித்தார்.

மேலும் இது குறித்து பேசிய சமூக சேவகர் கேசவன், இது ஒருவிதமான ஏமாற்றத்தின் வெளிப்பாடுதான்.ஆனால் ஆபத்தான வாழ்க்கையை நாசமாக்கக்கூடிய ஒரு வெளிப்பாடு எனத் தெரிவித்தார்.இதற்கு வெறும் சினிமா, சினிமாப் பாடல்கள் ஆகியவற்றை மட்டும் குறைகூறிவிட்டு நாம் தப்பிவிட முடியாது.

இதற்குக் குடும்ப சூழல்,சமூக சூழல் ஆகியவையும் காரணம்.காதல் தோல்வி என நினைப்பவன் நேராக மது அருந்தச் செல்கிறான்.அந்தப் போதையில் அவனது தவறான நண்பர்கள் கொடுக்கும் தவறான ஆலோசனைகளை அப்படியே கேட்டு செயல்படுத்துவது ஒருவகை.

மற்றொரு வகை குடும்ப சூழல், குடும்பத்தில் மகன் வித்தியாசமான மனநிலையில் இருந்தால் உடனடியாக கவனிக்க வேண்டும்.இல்லாவிட்டால் இது போலத்தான் நடக்கும்.வருமுன் காப்பதே பிரச்சினைக்கு தீர்வு எனத் தெரிவித்தார்.எது எப்படி இருந்தாலும்,உண்மையான காதல் மூலம் வாழ்வின் உச்சத்தை அடைந்தவர்களும் உள்ளனர்.

இனக்கவர்ச்சியால் வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டு சிறையில் காலத்தைக் கழிப்பவர்களும் உள்ளனர்.இது முழுக்க முழுக்க சமூகம் மற்றும் பெற்றோரையே குற்றம் சாட்டுகிறது என்பதில் சந்தேகமே இல்லை.

மேலும் படிக்க