January 8, 2018 தண்டோரா குழு
கோவை பாப்பீஸ் ஹோட்டலில் ட்வைலைட் பை நைட் என்ற தனது புதிய தென்னிந்திய பாரம்பரிய உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
ட்வைலைட் பை நைட் தென்னிந்திய உணவகத்தில் கையால் அரைத்த மசாலாக்களை உபயோகித்து உணவு தயாரிப்பதே இதன் சிறப்பாகும்.இந்த உணவகம் தெருவோர உணவு மற்றும் கிராமிய வாசனை சேர்ந்த சூழ்நிலையில் உருவாக்கப்பட்டுள்ளது.ஒரு கூட்டமான தெருவில் கிடைக்கும் உணவை விருந்தினரின் கண் முன்னரே செய்து சிறப்பான முறையில் சுவையுடன் வழங்கப்படுகிறது.
இந்த உணவகங்களில் உணவுகள் மண் பாத்திரங்களில் சமைக்கப்பட்டு மண் பாத்திரங்களில் பரிமாறப்படுகின்றன.நமது முன்னோர் விட்டு சென்ற பழைய பாரம்பரியத்தை மறந்து விடாமல் இருக்கவும், சுகாதார எண்ணமுள்ள மக்களை ஈர்க்கவும் கையால் அரைக்கப்பட்ட மசாலாக்களை வைத்து பழைய பாட்டிகை சமையல் ருசியை வழங்குகிறது.
உணவு மண் பாத்திரங்களில் பரிமாறப்படுவதால் நல்ல ஆரோக்கியத்தை தருகிறது மற்றும் ஏராளமான உடல் நலன்களைப் பெறுவதற்காக ஒரு செப்புக் குவலவையிலிருந்து குடிக்க தண்ணீர் வழங்கப்படுகிறது.
இந்த உணவகத்தில் சாலையோர கலை பொருட்கள், ட்ரம்கள், பானைகள், கொரகோட்டா பானைகள், மண் பானைகள், ஆட்டுக்கல், பனை இலை துடைப்பான்கள், மற்றும் கடாய் ஆகியவற்றின் கலவையாகும். மேலும் இங்கு உள்ள தொழிலாளிகள் பாரம்பரிய வேட்டி மற்றும் அங்கவஸ்திரம் அணிந்தே உணவு பரிமாறுவார்.
இந்த உணவகத்தில் சிறப்பம்சங்கள் பற்றி ஷெப் ராஜா கூறுகையில்,
எங்கள் உணவகத்தின் சிறப்பாக க்டெயில்-சிறுவாணி சாரல், பொள்ளாச்சி இளநீர்,
காற்றாழை சர்பத் ,நேந்திரம் பழ தட்டை,கைமா காளான் உருண்டை,குளித்தலை வாழைப்பூ வருவல், மக்காச்சோள வாழைப்பூ வடை மற்றும் அசைவ பிரியர்களுக்காக பொள்ளாச்சி மாசி மீன் புட்டு, கருக்கு முருக்கு நண்டு, கொங்கு இறைசி உருண்டை, கருவேப்பிலை இறால்.
மேலும்,சோலக்கருது வருத்த கறி, அன்னாசி பழ அரைத்த குழம்பு, நெய் கத்திரிக்காய் மசியல் மற்றும் அசைவம் உண்பவர்களுக்கு அரண்மனை கோழி குழம்பு, இறால் தக்கலை தொக்கு, இறால் கொத்தமல்லி புளி கறி, நண்டு ரோஸ்ட், பாட்டியம்மா மீன் குழம்பு ஆகியவை கிடைக்கும்.
இதுதவிர, அருகம்புல் கோதுமை பரோட்டா, பாட்டியம்மா கைத்தட்டல் ரொட்டி, வெற்றிலை ரொட்டி, மற்றும் வித விதமான இடியாப்ப வகைகள் மற்றும் எங்களில் சிறப்பம்சமான கருப்பட்டி ஜிலேபி, வேர்க்கடலை தட்டை, தேங்காய் பால் பணியாரம் ஆகியவை கிடைக்கும்.ஒவ்வொரு உணவும் ஆரோக்கியமான பொருட்கள், செயற்கை வண்ணம் இல்லாமல், இயற்கை இனிமையுடன் இங்கு கிடைக்கும்.
இதுகுறித்து Mrs India Earth 2016-17 மற்றும் பிசினல் பாடி ஸ்கில்பிங் தெரபி நிர்வாக இயக்குனருமான ஜெயா மகேஷ் கூறுகையில்,
இந்த பாரம்பரிய உணவு உடலுக்கு மிகுந்த ஆரோக்கியமானதாகும்.இன்றய காலகட்டத்தில் உள்ள உணவு நடைமுறையில் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் நோய்களால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.எனவே நமது பாரம்பரிய உணவு முறையை பின்பற்றினால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.