• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கைப்பேசியின் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை. எதிர்க் கட்சிகள் புகார்

July 27, 2016 தண்டோரா குழு

ஹைதராபாத்திலுள்ள காந்தி மருத்துவமனையில் கைப்பேசியின் வெளிச்சத்தில் ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்ற காரணத்திற்காக தெலுங்கானாவின் சுகாதார அமைச்சர் லக்ஷ்ம ரெட்டியையும், காந்தி மருத்துவமனை மேலதிகாரியையும் பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று எதிர்க் கட்சிகள் குரல் கொடுத்துள்ளன.

மதியம் 2 மணிக்கு பராமரிப்புப் பணிக்காக மின்சாரம் தடை செய்யப்பட்டது. மின் தடையின் போது ஈடுகட்ட இரு ஜெனரேட்டர்கள் உபயோகப் படுத்தப்படுவது வழக்கம். பின்னர் 3.30 மணிக்கு மின் தடை அகற்றப்பட்ட போது ஒரு மின் இணைப்பு சரிவர வேலை செய்யவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் விளைவாகக் கிட்டத்தட்ட ஏழரை மணிநேரம் ஜெனரேட்டரின் உதவியோடு மருத்துவமனை இயக்கப்பட்டுள்ளது.

ஒரு ஜெனரேட்டரிலிருந்து மற்றொரு ஜெனரேட்டருக்கு இணைப்பை மாற்றும்போது ஒரு சில விநாடிகளே மின்சாரம் துண்டிக்கப்படும். நோயாளியின் காயத்திற்குத் தையல் போட்டுக் கொண்டிருக்கும் போது இடையில் மின்சாரத்தடை ஏற்பட்டதால் ஒரு சில விநாடிகள் கைப்பேசியின் துணையோடு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்று மருத்துவமனைத் தலைவர் டாக்டர் CV சாலம் தெரிவித்தார்.

இதய சிகிச்சைக்கு, மற்றும் பல முக்கியமான சிகிச்சைகளுக்குத் தேவையான பல கருவிகளும் 20 முதல் 30 நிமிடங்கள் வரை மாற்று மின்கலங்களின் உதவியோடு செயல்பட வல்லவை, ஆகையால் 20 அல்லது 30 நொடி மின்சாரத்தடை ஒரு பொருட்டல்ல என்றும் கூறினார்.

வெள்ளியன்று நடந்ததாகப் பதிக்கப்பட்ட 21 மரணங்களுக்கும் மின் தடைக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை, மேலும் 3.30 மணியிலிருந்து நடு இரவு வரை நடந்த 5 மரணங்களும் வேறு பல காரணங்களினால் நிகழ்ந்தவையேயன்றி மின் தடை பொறுப்பாகாது என்று பிற மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

1,400 உள் நோயாளிகள் கொண்ட இம்மருத்துமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவும், பிறந்த சிசுக்களைப் பேணும் பிரிவும் சரிவர கவனிக்கப் படுவதில்லை என்றும், மின்சாரத் தடை காரணமாகப் பல கருவிகள் பழுதடைவதால் மரணங்களைத் தவிர்க்க முடிவதில்லை என்றும் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் P.L.விஷ்வெஸ்வர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

14 லிப்ட் கொண்ட இம்மருத்துமனையில் இரண்டு மட்டுமே உபயோகிக்கும் வகையில் உள்ளது. ஒரே ஒரு குழாய் மட்டுமே சீராக உள்ளது. இது போன்ற பல சீர்கேடுகளைப் பற்றி ஒரு வருடம் முன்பே தாங்கள் புகார் அளித்துள்ளதாகவும் கூறினர்.

தெலுங்கானா சதர்ன் பவர் டிஸ்ரிபூஷன் நிர்வாகம் கூறுகையில், மின்சார வினியோகத்தில் எந்தக் குறைபாடும் இல்லை, மருத்துவமனையின் மின் அறையும், ஜெனெரேட்டர்களுமே இவற்றுக்குக் காரணம் என்று தெரிவித்தனர்.

எது எவ்வாறாயினும், யார் காரணமானாலும் பாதிக்கப்படுவது நோயாளிகளே.

மேலும் படிக்க