• Download mobile app
16 Sep 2024, MondayEdition - 3141
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய இளம் நீச்சல் வீராங்கனைக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ஆதரவு

June 27, 2016 தண்டோரா குழு

இந்திய இளம் நீச்சல் வீராங்கனைக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தனது பாராட்டையும், ஆதரவைவும் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்தவர் பக்திசர்மா(26). இவர் 2020ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா சார்பில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளார். பொதுவாக ஒலிம்பிக்கில் நடைபெறும் நீச்சல் போட்டியில் பங்கேற்க, திறந்த வெளியில் 10 கிலோமீட்டர் தூரம் நீச்சலடிக்க வேண்டும். இதற்காக பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு பக்திசர்மா சாதனை படைத்துள்ளார்.

எளிமையான குடும்பத்தை சேர்ந்தவரான பக்திசர்மா தனது ஒலிம்பிக் கனவை நிறைவேற்ற, பயிற்சிக்கு நிதி திரட்டுவதற்காக “Fuel a dream” என்ற பெயரில் ஒரு இணையப் பக்கத்தை உருவாக்கியுள்ளார். அந்த இணையதள பக்கத்தில் தன்னுடைய பயிற்சிக்காக 2.30 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும், இதற்கான நிதி திரட்டும் வேலையைக் கடந்த 13ம் தேதி முதல் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 12 நாட்களில் 1.18 லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளதாகவும், இன்னும் 76நாட்கள் மீதம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வது எளிதானதல்ல எனக் குறிப்பிட்டுள்ள பக்திசர்மா, பெண் விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சிக்கான நிதி, முறையான பயிற்சி, ஸ்பான்சர் உள்ளிட்டவை கிடைப்பது மிகவும் சிரமமான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இளம் நீச்சல் வீராங்கனை பக்திசர்மாவிற்கு புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது பாராட்டுகளுடன், ஆதரவும் தெரிவித்துள்ளார். அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தனக்கு ஆதரவளித்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகப் பக்திசர்மா தனது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம், அண்டார்டிக் பெருங்கடலில் 1 டிகிரி செல்சியல் வெப்பநிலையில், 2.28 கிலோமீட்டர் தொலைவை 41.14 நிமிடங்களில் கடந்து சாதனைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க