• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியா மீது அணு ஆயுத போர் நடத்தப் போவதாக மிரட்டல்

August 8, 2016 தண்டோரா குழு

பல ஆண்டுகளாக காஷ்மீரின் உரிமை சம்பந்தமாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்தது வரும் பிரச்சனை குறித்து உலகமே அறியும்.

தற்போது இந்தப் பிரச்சனையில் ஒரு புதிய பிரச்சினையாக இந்தியா மீது பாகிஸ்தான் அணுஆயுத போர் தொடுக்கும் என்று மிரட்டல் எழுப்பியுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி சையது சலாலுதீன் இந்திய மீது பாகிஸ்தான் ஆணு ஆயுதம் போரை தொடுக்கும் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளான். இந்த மிரட்டலைக் குறித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அவர் பேசுகையில், பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்தப் பிரச்சினையில் காஷ்மீரில் உள்ள மக்கள் விட்டுக் கொடுக்க போவதில்லை என்றும், இந்தியா மீது அணு ஆயுதப் போர் தொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், இந்திய மண்ணில் ரத்த ஆறு ஓடும். காஷ்மீர் பிரச்சினையில் நடக்கும் இந்த 4வது உரிமைப் போரில் காஷ்மீரிகள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பயங்கரவாதியின் மிரட்டல் காணொளியை கண்ட பின்னர், பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புக்கள் எவ்வளவு சுதந்திரமாக உலா வருகின்றன என்பதையும், அங்கு உள்ள கொடூர நிலைப்பாட்டையும் காட்டுவதாக உள்ளது என்று அதைப் பார்த்த இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க