December 22, 2017 தண்டோரா குழு
சவூதி அரேபியாவில் இருந்து லண்டன் செல்லும் விமானங்களில்,மின்னணு சாதனங்களை எடுத்து செல்ல அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது.
சவூதி நாட்டில் விமானங்களில்,பாதுகாப்பு காரணமாக மின்னணு சாதனங்களை எடுத்து செல்ல
அந்நாடு தடைவிதித்திருந்தது.தற்போது அந்த தடையை நீக்கி மின்னணு சாதனங்களை விமானத்தில் எடுத்து செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
இதனையடுத்து,இன்று முதல்(டிச 22) சர்வதேச விமானநிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களில், பயணிகள் மடிகணினி மற்றும் டேபிலேட் போன்ற மின்னணு சாதனங்களை பயன்படுத்தலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்,கடந்த மார்ச் மாதம், துருக்கி, லெபனான், சவூதி அரேபியா, எகிப்து, ஜோர்டான், டுனிசீயா ஆகிய நாடுகளில் இருந்து நேரடி விமானம் மூலம் அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு வரும் பயணிகள், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, விமானத்தில் மின்னணு சாதனங்களை எடுத்து வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஜூலை மாதம், சவூதி அரேபியாவில் இருந்து அமெரிக்காவிற்கு வரும் விமானங்களில் மின்னணு சாதனங்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.