• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிட்சா விநியோகம் செய்த மனிதாபிமான காவல் அதிகாரி

May 31, 2016 தண்டோரா குழு.

ஒரு சாலை விபத்து என்றால் மக்கள் அதை வேடிக்கை பார்ப்பதோடு சரி. அடிப்பட்ட நபருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் பிறகு காவல், வழக்கு என்ற பிரச்சனை வந்து விடுமோ என்ற பயம் அவர்களுக்கு உண்டாகி விடுகிறது.

ஆனால் ஒரு போக்குவரத்து காவல் அதிகாரி விபத்தில் சிக்கிய ஒருவருக்கு உதவ முன் வந்த ஒரு சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அமெரிக்க நாட்டின் மத்திய மேற்கு மாநிலமான மிசிகனில் லின்கன் பார்க் என்னும் நகரில் உள்ள பிரபல பிட்சா உணவகமான ஜெட்ஸ் பிட்சாவில் பணிபுரிந்த ஒருவர் அங்கு ஆர்டர் செய்த பிட்சாவை கொடுக்கச் சென்ற போது சாலை விபத்தில் சிக்கிக்கொண்டார்.

இந்தச் சம்பவத்தை விசாரிக்க வந்த போக்குவரத்து காவல் அதிகாரி, ஜோ ஸ்பார்க்ஸ் விபத்தில் சிக்கிய வாகனத்தை இழுவைக்குக் கொண்டு செல்லக் கட்டளையிட்டார்.

மேலும், விபத்தில் சிக்கிய அந்தப் பணியாளரை சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உத்தரவிட்டார்.

ஸ்பார்க்ஸ் அந்த இடத்தைச் சோதனை செய்துகொண்டு இருந்த போது, ஒரு பையில் பிட்சா ஒன்று இருந்தை கவனித்தார். ஆர்டர் செய்யப்பட்ட பிட்சாவை கொண்டு செல்லும் போது தான் இந்த விபத்து நேர்ந்தது என்பதை புரிந்துகொண்டார். முதலில் அதை ஜெட்ஸ் பிட்சா உணவகத்திற்குத் திருப்பி கொடுக்க வேண்டும் என்று தோன்றியது, ஆனால் இதற்காகப் பசியோடு காத்துக்கொண்டு இருக்கும் ஒரு ஜீவனின் நிலையைப் புரிந்து கொண்டார்.

பின்னர் அந்தப் பையில் இருந்த விலாசத்தைப் பார்த்த போது அதில் குறிப்பிட்டு இருந்த வீட்டின் எண் அந்த இடத்தின் அருகே தான் இருக்கிறது என்று தெரிந்துகொண்டார். அதனால் அதை நேரடியாகக் கொண்டு போய் கொடுப்பது தான் சரியானது என்று தோன்றியதாக ஸ்பார்க்ஸ் தெரிவித்தார். மேலும், தன் உணவிற்காக அங்கு ஒருவர் காத்துக்கொண்டு இருப்பார் என்று உணர முடிந்தது என்று கூறினார்.

வெண்ணெய், மாட்டிறைச்சி, மற்றும் பன்றிக்கறி இறைச்சியால் செய்யப்பட்ட சாச்சேஜ் கொண்ட செய்யப்பட்ட பிட்சாவை தான் ஆர்டர் செய்து வெகு நேரம் ஆகியும் தனக்கு வந்து சேரவில்லை. அது என்ன ஆயிற்று என்று கார்ல் ஜெட்ஸ் பிட்சா உணவகத்தில் முறையிட்டார். ஆனால் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்துக் கொண்டு இருந்தது. ஆர்டர் செய்த பிட்சாவை ஒரு காவல் அதிகாரி கொண்டு வந்து தருவார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

மேலும், ஒரு காவல் அதிகாரி தனக்கு ஏன் இதைச் செய்தார். இது உண்மையிலேயே விசித்திரமானது என்று கார்ல் தெரிவித்தார். நடந்த சம்பவத்தை குறித்து கார்லிடம் விளக்கிக் கூறினார் ஸ்பார்க்ஸ். குழப்பம் நீங்கிய பிறகு தான் வழக்கம் போல் ஐந்து அமெரிக்க டாலரைப் பிட்சா கொண்டு வருபவருக்குத் தருவது வழக்கம்.

ஒரு அதிகாரியிடம் எப்படி அதைக் கொடுப்பது என்று தயங்கினார் கார்ல். தன்னுடைய கடமையை தான் செய்ய நேர்ந்தது என்று கூறி அதை வாங்க மறுத்துவிட்டார். இதைக் கேட்ட கார்ல் அந்த பணத்தை ஜெட்ஸ் பிட்சா உணவகத்திற்குக் கொடுக்க முடிவு செய்தார்.

ஸ்பர்க்சின் அர்ப்பணிப்பைப் பாராட்டி ஜெட்ஸ் பிட்சா உணவகம் காவல்துறைக்கு இலவச உணவைக் கொடுக்க முன்வந்தது. ஆனால் தான் தன்னுடைய கடமையை செய்ததாகவும் மேலும் தான் அந்த நகரத்தில் வளர்ந்ததால் தன்னால் எதைத் தர முடியுமோ அதைத் திரும்பி தரத்தான் தயாராக உள்ளதாக ஸ்பார்க்ஸ் தெரிவித்தார். மேலும், விபத்தில் சிக்கிய அந்தப் பணியாளருக்கு மூளை அதிர்ச்சி ஏற்பட்டதினால் மீண்டும் பணியில் சேர்வதைக் குறித்து சரியாகக் கூற முடியாது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க