December 26, 2016
தண்டோரா குழு
“வரும் புத்தாண்டு தினக் கொண்டாடத்தின் போது அத்துமீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் கூறும்போது, “விபத்தில்லா 2017ம் வருடத்தின் தொடக்கமாக புத்தாண்டு தினத்தன்று கோவை மாநகரில் 22 இடங்களில் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்படும். மேலும், பாதுகாப்புப் பணியில் 1500 போலீஸார் ஈடுபட உள்ளனர்.
இதனால் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர் மீதும், பொதுமக்களுக்கும் பிற வாகனங்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்தார்.