• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராஜஸ்தான், கல்வியில் எதற்கு அரசியல் சாயம்.

May 11, 2016 தண்டோரா குழு

ராஜஸ்தான் மாநிலத்தில் 8 ம் வகுப்பு வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவைப் பற்றிய எந்தத் தகவல்களும் தரப்படவில்லை. இதற்குக் கல்வித்துறை அமைச்சர் வாசுதேவ் தேவ்னானியிடம் விளக்கம் அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், வீர் சவர்கார், பகத்சிங், லாலாலஜபதிராய், பாலகங்காதர திலக், மற்றும் ஹேமுகலானி போன்ற பல தலைவர்களைப் பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் நேரு மற்றும் பிற காங்கிரஸ் போராட்ட வீரர்களைப் பற்றி எந்தக் குறிப்பும் இடம் பெறவில்லை.

மகாத்மா காந்தியை நாதுராம் கோட்ஸே சுட்டுக் கொன்றதைப் பற்றியும் எந்தக் குறிப்பும் இல்லை.

முந்தைய பாடபுத்தங்களில் நேரு, மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்களின் பங்களிப்பு விரிவாகக் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்தப் புதிய பாடத்திட்டத்தில் நேரு, சரோஜினி நாயுடு, மதன் மோகன் மால்வியா, ஆகிய எவரைப்பற்றியும் எந்தக் குறிப்பும் இடம் பெறவில்லை, மாறாக முதல் ஜனாதிபதி ராஜேந்திரப்பிரசாத் என்றும் நாட்டிற்கு அவரது பங்களிப்பைப் பற்றியும் தெளிவாகத் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தரப்பு போராட்ட வீரர்களை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்து விட்டதாகக் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கல்வித்துறை அமைச்சர் வாசுதேவ் தேவ்னானி பதிலளிக்கையில் ஸ்டேட் இன்ஸ்டிடியுட் ஆப் எஜுகேஷன் ரிசர்ச் அன்ட் டிரெயினிங் (SIERT) என்ற அமைப்பே பாட புத்தகங்களில் இடம் பெற வேண்டிய தொகுப்புக்களை நிர்ணயிக்கும் உரிமை பெற்றது. மற்றபடி இவ்விஷயங்களில் அரசு தலையிடுவதில்லை என்று கூறினார்.

மேலும் நேருவின் பெயர் இரண்டு இடத்தில் குறிப்பிடப் பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அரசியல் சாசனம் என்ற அத்தியாயத்தில் அதன் குறிக்கோள்களைப் பற்றியும், தீர்மானங்களைப் பற்றியும் விளக்குகையில் நேருவின் பெயர் 9 வது பக்கத்தில் இடம் பெற்றுள்ளதாகவும், இரண்டாவதாக 177ம் பக்கத்தில் ராஜஸ்தானை ஒருங்கிணைப்பதற்கான முதற்படியை நேரு துவங்கி வைத்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

முக்கியமாக இன்னொரு கன்னையகுமார் இந்நாட்டில் உருவாகக் கூடாது என்றும் கூறினார்.

பள்ளிக் குழந்தைகளுக்கு ராஜஸ்தானின் வீர புருஷர்களைப் பற்றியும், வீர நங்கைகளைப் பற்றியும் போதிப்பது, மற்றும் இந்தியக் கலாச்சாரத்தைப் பற்றி பெருமைகளை உணர்த்துவது, ஒரு முன்னுதாரண புருஷனாகத் திகழும் படி கற்பிப்பது, நாட்டுப் பற்று உள்ளவனாக உருவாக்குவது, போன்ற பாடத் திட்டத்தை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது என்றும் கூறினார்.

அடுத்ததாக முகலாயச் சக்கிரவர்த்தி அக்பரைக் குறிப்பிடும் போது கிரேட் என்று போடுகிறோம், ஆனால் மஹாராணா பிரதாப்பைப் பற்றிக் குறிப்பிடுகையில் அதை உபயோகிப்பதில்லை. அது மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்றார்.

மோகன்லால் சுகாடியா யுனிவர்சிட்டி முன்னாள் பேராசிரியர் கே.எஸ்.குப்தாவும் இதில் அரசின் பங்கு எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.

அரசின் தரப்பிலிருந்து சேர்க்கவேண்டிய பகுதிகளைப் பற்றிக் குறிப்புகள் வந்தனவே தவிர, எந்தப் பகுதியையும் குறைக்கும்படித் தகவல் தெரிவிக்கவில்லை என்றார்.

நேருவைப் பற்றி குறிப்புக்கள் நீக்கப்பட்டது வேண்டுமென்றே செய்தது அல்ல, பாடக்குழு பரிசீலனையில் ஏற்பட்ட தவறாக இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

காங்கிரஸ்காரர்கள் ஒருபுறம், காங்கிரஸ் அல்லாதோர் இன்னொரு புறம் என இது இருபக்க அரசியலாக அலசப்பட்டு வருகிறது.

சர்தார் பட்டேல் இந்தியாவை ஒருங்கிணைக்காவிட்டால் நேரு பிரதம மந்திரி ஆகியிருக்க முடியுமா?

பட்டேல், பஹத்சிங், மஹாராணா பிரதாப் போன்ற வீரர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுவதும் முக்கியமே. காங்கிரஸ்காரர்கள் தங்கள் குடும்ப பாதிப்பைப் பற்றியே சிந்திப்பர் என்று விமரிசித்துள்ளார் ஜெய்ப்பூர் கிராமிய பா.ஜ.க தலைவர் டி.டி.குமாவத்.

நவீன இந்தியா உருவாகக் காரணமானவரும், இந்தியாவில் குடியாட்சி மலர்ந்திட வித்திட்டவருமான நேருவின் பெயரை நீக்குவது பா.ஜ.க செய்யும் வெட்கத்தைக்க செயலாகும். சரித்திரத்தை மாற்ற முயற்சிக்கும் இச்செயல் சரித்திரமாகும் என்றும் கெஹ்லாட் தெரிவித்துள்ளார்.

நாதுராம் கோட்சேயின் துப்பாக்கி குண்டினால் அவருடைய பூத உடல் அழிந்தாலும், அவருடைய புகழ் இன்றளவும் அனைவராலும் பேசப்படுகிறது. பிரதமர் மோடியும் அவரது புகழை நிதமும் நினைவுகூர்கிறார் என்றும் உரைத்துள்ளார்.

மேலும் படிக்க