January 13, 2018 தண்டோரா குழு
புதுச்சேரியில் கூட்டுறவு வங்கிகளின் விவசாயிகள் பெற்ற கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கூட்டுறவு வங்கியில் பெறப்பட்ட ரூ 19.42 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் கந்தசாமி அறிவித்துள்ளார்.மேலும்,விவசாய கடன் தள்ளுபடி செய்வதன் மூலம் 4,094 விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த சில ஆண்டாக கடும் வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு வேளாண்மற்றும் அதை சார்ந்த தொழில்களுக்காக விவசாய கூட்டுறவு வங்கி, சங்கங்களிடம் இருந்து பெறப்பட்ட கடன்களை அவர்களால் திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில்,இந்த கடன் சுமையில் இருந்து விவசாயிகளை விடுவிக்கவும், அவர்கள் புதிய கடன்களை பெற்று விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை எவ்வித தடையுமின்றி தொடர்ந்து மேற்கொள்ளவும், வேளாண் கூட்டுறவு கடன் நிறுவனங்களிடம் விவசாயிகளால் பெறப்பட்ட கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.