• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பஞ்சாபில் போலி ப்ளாஸ்மா விற்றவர்கள் கைது.

June 16, 2016 தண்டோரா குழு

ரிலையன்ஸ் லைப் சயின்ஸ் நிறுவனத்திற்கு விற்க வைத்திருந்த 21,700 உறைகளை அதாவது 7,600 லிட்டர் போலி ப்ளாஸ்மாவை பஞ்சாபிலுள்ள பாதிண்டா போலீஸ் கைப்பற்றியது.

எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம். உண்ணும் உணவில் கலப்படம், குடிக்கும் பானத்தில் கலப்படம். ஆனால் மனிதனுக்கு அத்தியாவசியத் தேவையான குருதி அணுக்களை ஏந்திச் செல்லும் ப்ளாஸ்மா எனும் திரவத்தில் கலப்படம் செய்திருக்கிறார்களென்றால் பணம் என்ன தான் செய்யாது?
ரத்தத்தில் மிகப்பெரிய அளவு வகிப்பது ப்ளாஸ்மா.

இதனுடைய முக்கியப் பணி என்னவென்றால் ரத்தத்திற்குத் தேவையான சத்துக்களை எடுத்துச் செல்வது, ஆபத்தான நேரங்களில் நோய் எதிர்ப்புச் சக்தியுள்ள சத்துக்களையும், புரதச் சத்துகளையும் ரத்தத்திற்குக் கொண்டு செல்வது. அதைப் பிரிப்போமேயானால் வெளிர்மஞ்சள் நிறமுடன் காணப்படும்.

மும்பையை மையமாகக் கொண்ட ரிலையன்ஸ் லைப் சயின்ஸ் நிறுவனம் ப்ளாஸ்மா விற்பனை செய்து வருகிறது. பல மருத்துவமனைகளும் இங்கிருந்து கொள்முதல் செய்து கொள்வர் இதைத் தயாரித்தவர்கள் உண்மையான ப்ளாஸ்மாவுடன் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், சோயா பீன்ஸ்ன் பால், மற்றும் முட்டையின் மஞ்சள்கரு கலந்து தயாரித்துள்ளனர்.

இதனால் நோய் குணமாகாதது மட்டுமின்றி உயிருக்கே ஆபத்து ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். இவை அழகு சாதனங்களிலும் உபயோகப்படுத்தப்படும். உண்மை ப்ளாஸ்மா போல்

தோற்றமளிக்கக் குற்றவாளிகள் இதை மைனஸ் 20 டிகிரி செல்சியர்ஸ் தட்ப நிலையில் வைத்துள்ளனர். காவல் துறையின் விவரப்படி இந்நிறுவனம் 1.25 கோடி ரூபாய் மதிப்புள்ள 5,000 லிட்டர் ப்ளாஸ்மா வாங்குவதற்கு 20 லட்சம் ரூபாய் முன்பணத்தை இந்த ஏமாற்றுக்காரர்களிடம்
கொடுத்துள்ளது. காவல் துறையினர் போலி உறைகளைக் கைப்பற்றியதோடு ஒரு வாகனத்தையும்
கைப்பற்றியுள்ளனர்.

குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் ஜூன் 17ம் தேதி வரை வைக்கப்பட்டுள்ளனர் என்று AIG அஜய் மலுஜா கூறியுள்ளார். டிபாக் சிங், பரமீட் சிங் இருவரும் ஆதேஷ் ஹாஸ்பிடல் ப்ரைவெட் லிமிடெட்ன் ஊழியர்கள்.

பரம்ஜிட் சிங், அவரது சகோதரர் நரீந்தர் சிங் இருவரும் மாக்ஸ் மருத்துவமனை ஊழியர்கள்

லால் பகதூர் என்பவர் வண்டியோட்டி. இவர்கள் அனைவரும் கூட்டுக் குற்றவாளிகள். காவல் துறையினர் விசாரணையைத் தீவிரமாக முடுக்கி விட்டுள்ளனர்.

மேலும் படிக்க