• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரயில் மறியலுக்கு தொண்டர்கள் அணிதிரள மக்கள் நலக்கூட்டியக்கம் அறை கூவல்

October 14, 2016 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து செப்டம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் ரயில் மறியல் போராட்டத்திற்கு ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் அணிதிரள வேண்டும் என மக்கள் நலக்கூட்டியக்கத்தின் கோவை மாவட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை காந்திபுரத்தில் உள்ள மதிமுக மாவட்ட தலைமையகத்தில் மக்கள் நலக்கூட்டியக்கத்தின் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக, சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ,

காவிரி நீர் பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் நான்கு வாரகாலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என தீர்ப்பளித்தது. ஆனால் மத்திய அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

மத்திய அரசின் இத்தகைய ஒருதலைபட்சமான நடவடிக்கையை கண்டித்து விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்திட அறைகூவல் விடுத்தது.

இந்த ரயில் மறியல் போராட்டத்தை வெற்றிகராமக்கிட செப் 17 ஆம்தேதி கோவை ரயில் நிலையத்திலும், செப்.18 ம் தேதி பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என கோவை மாவட்ட மக்கள் நல கூட்டு இயக்கம் சார்பாக முடிவு செய்யப்பட்டது.

இந்த ரயில் மறியல் போராட்டத்தில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து கட்சிகள், மக்கள் நல இயக்கங்களின் ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தமிழகத்தின் வாழ்வாதாரமாக விளங்கும் நீராதார உரிமையை பாதுகாக்க அணிதிரள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் படிக்க