December 5, 2017 தண்டோரா குழு
ராஜஸ்தானில் 1 கோடி ரூபாய் வரதட்சணை கேட்டதால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின்,கோடா நகரை சேர்ந்தவர் டாக்டர் அனில் சக்சேனா. அவருடைய மகளுக்கும், உத்தர பிரதேஷ் மாநிலத்தின் மொராதாபாத் மருத்துவ கல்லூரியில் உதவி பேராசியராக பணிபுரியும் டாக்டர் சாக்சம் என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது.
இந்நிலையில்,திருமண நாளன்று, மணமகன் வீட்டார், மணபெண்ணின் பெற்றோரிடம் 1 கோடி ரூபாய் வரதட்சணையாக தரவேண்டும் என்று கேட்டுள்ளனர். இதை கேட்ட பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து மணப்பெண்ணிடம் தெரிவித்துள்ளனர். உடனே அவர், மணமகனிடம் பேசியுள்ளார். ஆனால், மணமகன் வரதட்சணை தருவது குறித்து பிடிவாதமாக இருந்ததை அடுத்து, மணப்பெண் திருமணத்தை நிறுத்திவிட்டார்.
ஏற்கனவே,நிச்சியதார்த்ததின் போது, மணமகனுக்கு கார், 5 தங்க நாணயங்கள் மற்றும் 30 முதல் 35 லட்சம் வரை வரதட்சணை கொடுத்திருந்த நிலையில்,1 கோடி ரூபாய் கேட்டது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
மேலும்,இச்சம்பவம் குறித்து மணப்பெண்ணின் வீட்டார்,காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.அவர்களுடைய புகாரை ஏற்று கொண்டு,காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிகின்றனர்.