• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தூக்கில் தொங்கி பத்மாவதி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த வாலிபர்

November 24, 2017 தண்டோரா குழு

ராஜஸ்தானில் பழமையான கோட்டை ஒன்றில், பத்மாவதி திரைப்படத்துக்கு எதிரான வாசகங்களுடன், தூக்கிட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சயித் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பத்மாவதி. இப்படம் டிசம்பர் 1ம் தேதி படம் வெளியாகும் என கூறப்பட்டது.

இந்நிலையில், ராணி பத்மாவதியை இழிவாக சித்தரிப்பதாக கூறி இப்படத்திற்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் படத்தின் வெளியீடு நிறுத்தி வைக்கபட்டுள்ளது.

இதற்கிடையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பழமையான நாகர்கர் கோட்டையில் (Nahargarh fort) 40 வயது மதிக்கத்தக்க ஒருவரின் உடலை தூக்கில் தொங்கிய நிலையில் போலீசார் மீட்டுள்ளனர். அதன் அருகே உள்ள பாறையில், உருவபொம்மைகளை நாங்கள் தூக்கிலிட மாட்டோம் என்று கரித்துண்டால் எழுதி, பத்மாவதி என்று குறிப்பிட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த சேட்டன் சைனி (Chetan Saini) என்ற கைவினைப்பொருள் வியாபாரி என தெரியவந்துள்ளது. இது கொலையா தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க