• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரோபோக்கள் போதும் தொழிலாளர்கள் வேண்டாம் : ரேமண்ட்ஸ்

September 16, 2016 தண்டோரா குழு

ரோபோக்களை பயன்படுத்த இருப்பதால் சுமார் 10,000 தொழிலாளர்களை பணியை விட்டு நீக்க இருப்பதாக ரேமண்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜவுளித் துறையில் சிறந்து விளங்கும் ரேமண்ட்ஸ் நிறுவனம் தங்களது உற்பத்தி மையங்களில் இருந்து மூன்று வருடத்தில் 10,000 தொழிலாளர்களைப் பணியை விட்டு நீக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இது குறித்து, ரேமண்ட்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி சஞ்ஜய் பெல் கூறுகையில், தொழிலாளர்களை நீக்கிவிட்டு ரோபோக்கள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பணியில் ஈடுபடுத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ரேமண்ட்ஸ் நிறுவனத்தில் உள்ள 16 உற்பத்தி ஆலைகளில் மொத்தம் 30,000 தொழிலாளர்கள் பணியில் உள்ளதாகவும், 2000 தொழிலாளர்கள் ஒரு ஆலையில் பணியில் ஈடுபட்டு வருகின்றதாகவும் தெரிவித்தார்.

எனவே, ரோபோக்கள் போன்ற தொழில்நுட்பங்களை நிறுவுவதால் சுமார் 20,000 பணியாளர்கள் மட்டுமே வேலைக்கு அமர்த்தப்படுவர். மேலும், ஒரு ரோபோ சுமார் 100 பணியாளர்களின் வேலையைச் செய்ய முடியும். இது போன்ற வேலைகளை ரோபோக்கள் சீனாவில் செய்து வருகின்றன. விரைவில் இந்தியாவிலும் அவைகளை பயன்படுத்தவுள்ளனர். ஜவுளித் துறையில் நிறைய மனிதவளம் தேவைப்படுகின்றது. அதைக் குறைக்கும் முயற்சியில் தொழில்நுட்பங்களை நிறுவும் குழு செயல்பட்டு வருவதாக கூறினார்.

மேலும், இந்தியாவில் பெருநிறுவனங்களில் குறிப்பாக உற்பத்தித் துறைகளில் மெதுவாகத் தொழில்நுட்பங்களின் ஆதிக்கம் அதிகமாகி வருகிறது என்று நிபுணர்கள் குறியுள்ளனர், இதனால் இந்தியாவில் 10 சதவீதம் வரை வேலையின்மை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஆயு நிறுவனம் ஒன்று இது பற்றி கருத்து தெரிவிக்கையில், இந்திய ஐடி சேவைத் துறைகள் மற்றும் உற்பத்தித் துறைகளில் ஏற்பட்டு வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்னும் சில வருடங்களில் சுமார் 6.4 லட்சம் பணியாளர்கள் வேலையை இழப்பார்கள் என்று தெரிவித்துள்ளது.

ஒரு பக்கம் வேலை இழப்பு அதிகரிக்கும் என்ற நிலையில் 56 சதவீதம் வரை அதிகம் திறமையுள்ளவர்களுக்கான வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும் பிக் டேட்டா, பகுப்பாய்வு, இயந்திர கற்றல், இயக்கம், வடிவமைப்பு, இணையதள விவரங்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற பிரிவுகளில் அதிக வருமானத்துடன் கூடிய வேலை வாய்ப்பு பெருகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க