August 12, 2016 தண்டோரா குழு
ஸ்வீடன் உப்சலாவில் உள்ள லிவெட்ச் அல்லது வொர்ட் ஒஃப் லைஃ என அழைக்கப்படும் தேவாலயம் தங்களது புனித நூலான பைபிளை விமானத்திலிருந்து இஸ்லாம் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ள ஈராக் பகுதிகளில் மலர் போலத் தூவியுள்ளனர்.
கிறிஸ்துவத்தோத்திரங்கள் அடங்கிய இந்நூல் சிறிய மாத்திரைப் பெட்டியைப் போல் தோற்றமளிக்கும். இவை மின்சாரத்தின் உதவியின்றி காட்சியளிக்கவல்லது.
தீவிரவாதிகளின் தாக்குதலுக்குள்ளாகி உரிமைகள் இழந்து தவிக்கும் மக்களுக்கு நம்பிக்கையும், அன்பையும் அளிக்கவே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சபைப் பணி இயக்குனர் கிரிஸ்டியன் அகெரிஎல்ம் கூறியுள்ளார்.
இவ்வமைப்பு ஜூலை மாதம் 24 முதல் 31 ம் தேதி வரை ஒரு வாரக் காலம் இஸ்ரேல் நாட்டிற்குச் சுற்றுப்பயணம் சென்று கிறிஸ்து மத போதனைகளைப் போதித்துள்ளது.
ஈராக்கில் கடந்த 2003ம் ஆண்டு 1.4 மில்லியன் இருந்த கிறித்துவர்களின் எண்ணிக்கை தற்போது 2,50,000 ஆகக் குறைந்துள்ளது என்று சிறுபான்மை உரிமைக் குழு தெரிவித்துள்ளது.
2014ம் ஆண்டு இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதிகள் ஈராக்,மற்றும் சிரியா நாடுகளின் பல இடங்களை அவர்களின் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவந்து, இஸ்லாம் மத நம்பிக்கை இல்லாதவர்கள் மீது போர் தொடுத்து அனைவரையும் அழிக்கச் சபதம் எடுத்துள்ளனர்.
அமெரிக்காவும் அதன் துணைநாடுகளும் ISIS க்கு எதிராக நடத்திய ஆகாயத்
தாக்குதலினால் தீவிரவாதிகள் தங்களுடைய பாதி இடங்களை இழந்து விட்டனர்.
அதை திரும்பப் பெற தீவிர வாதிகள் எடுத்த முயற்சிகள் முழு வெற்றியை அளிக்கவில்லை. எனினும் ஆகஸ்டு 2014ம் ஆண்டு தொடங்கிய இப்போரில் சாதாரணப் பிரஜைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமெரிக்கப் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.
ஈராக்கில் கிட்டத்தட்ட 3.2 மில்லியன் மக்கள் தங்கள் .குடும்பத்தைப் பிரிந்து அவதிக்கு உள்ளாகியிருக்கின்றனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வொர்ட் ஒஃப் லிஃபெ தேவாலயம் 1983ம் ஆண்டு உல்ஃப் மற்றும் பிர்கிட்டா வால் நிறுவப்பட்டது. இந்தத் தேவாலயம் அமெரிக்காவின் பென்டெகொஸ்டே கொள்கைப்படி நடக்கும் ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது.