• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இதயம் மற்றும் மூளையை உறைய வைத்து 2 வயதுக் குழந்தையின் புற்று நோய்க் கட்டியை அகற்றி சாதனை

July 28, 2016 தண்டோரா குழு

இந்தியாவின் தெற்கு மாநிலமான கேரளாவை சேர்ந்த மெரின் பபீர் என்பவர் துபாயில் ஐ.டி துறையில் பணியாற்றியபடி கடந்த பத்தாண்டுகளாக தனது கணவருடன் அங்கேயே வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு வயது ஆண் மகன் உண்டு. சமீபத்தில் இரண்டு வயதாகும் ஆதிக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

துபாயில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவனை அனுமதித்தபோது ஆதியின் இதயம் அமைந்துள்ள பகுதியின் வெளிப்புறத்திலும் இதயத்தின் உள்பகுதியிலும் புற்று நோய்க் கட்டி உருவாகி இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அதனால், ரத்த சுழற்சியில் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்னும் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது.

பொதுவாக, கருத்தரிக்கும்போது பெண்களின் கருமுட்டையின் மேல் பகுதியில் இருக்கும் மெல்லிய திசு, கருத்தரித்த ஒருமாத காலத்துக்கு பின்னர் கரைந்து உடலில் இருந்து வெளியேறி விடும்.

ஆனால், ஆதி விவகாரத்தில் அந்த கருமுட்டையின் மேல் திசு, மெல்ல வளர்ச்சியடைந்து புற்று நோய்க் கட்டியாக மாறி, குழந்தையின் இதயத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

இதுபற்றி தெரிய வந்ததும் உடனடியாக மெரின், அவருடைய கணவர் மற்றும் ஆதியுடன் உடனடியாக சொந்த ஊருக்குத் திரும்பினார். கொச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இதய நோயியல் நிபுணரான டாக்டர் மூசா குன்ஹி தலைமையிலான டாக்டர்கள் குழு அறுவை சிகிச்சை மூலம் ஆதியின் இதயத்தில் ஏற்பட்டிருந்த புற்றுக்கட்டி அடைப்பை நீக்கத் தீர்மானித்தனர்.

இதையடுத்து, கடந்த ஆறாம் தேதி நடைபெற்ற மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சைக்காக சுமார் 30 டாக்டர்களை கொண்ட குழுவினர் சுமார் 9 மணி நேரமாகப் போராடி குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

சாதாரணமாக, மனித உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்ஷியஸ் ஆக இருக்கும். மேலும், 22 டிகிரி செல்சியஷுக்கு கீழே வெப்பநிலை போனால் உடனடியாக மரணம் நேர்ந்துவிடும்.

இந்நிலையில், இந்தச் சிகிச்சையின் போது குழந்தை ஆதியின் உடல் வெப்பநிலையைச் செயற்கையாக 15 டிகிரியாக டாக்டர்கள் குறைத்தனர். அவனது இதயம் மற்றும் மூளையை 40 நிமிடங்களுக்கு உறைய வைத்து, இயக்கங்களை நிறுத்தி சுமார் 9 மணிநேரம் நடைபெற்ற இந்த அரிய அறுவை சிகிச்சை மூலம் அவனது இதயத்தில் இருந்த சுமார் 200 கிராம் எடையுள்ள புற்று நோய்க் கட்டியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

மேலும், உலகிலேயே இந்த முறையில் நடைபெற்ற ஐந்தாவது அறுவை சிகிச்சை இது என டாக்டர் மூசா குன்ஹி கூறியுள்ளார். மேலும் அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஆதி நல்ல முறையில் உடல்நலம் தேறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க