ஆர்.கே.நகரில் வெற்றி நிச்சயம் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் டிசம்பர்21 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிடவுள்ளார். இதையடுத்து இன்று தி.நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லம், சென்னை ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை, ‘மெரினா’ கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதி ஆகியவற்றிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஷால்,
“என்னை தேர்தலில் போட்டியிட கூறி பின்னால் இருந்து யாரும் இயக்கவில்லை. அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என ஆர்.கே.நகர் மக்கள் விரும்புகிறார்கள். யாருடைய வாக்கு வங்கியையும் குறிவைத்து அதனை பிரிப்பதற்காக தேர்தலில் போட்டியிடவில்லை” என்று கூறினார். மேலும், 100 சதவீதம் தாம் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றும் தேர்தலில் போட்டியிட ரஜினி, கமல் என யாரிடமும் ஆதரவு கேட்க மாட்டேன்’ என்றும் கூறியுள்ளார்.
16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு : மாநில அளவிலான கூடைப் பந்து சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் துவங்கியது
கோவையில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களுக்கு பிராண்ட் கோயம்புத்தூர் தூதுவர் விருது
தான்ஹ் காங் குருப்பும் ஸ்கோடா குஷக் மற்றும் ஸ்லாவியாவை அசெம்பிள் செய்யும் ஆலை வியட்நாமில் திறப்பு
கோவையில் ₹37,500 ரூபாயில் மின்சார வாகனங்கள் – அசத்தும் ஓசோடெக் நிறுவனம் !
கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் சர்க்கரை நோய் சிறப்பு ஒரு நாள் முகாம்!
“தடயவியல் நர்சிங்: சமகால நடைமுறைக்கான ஒரு வளர்ந்து வரும் திறன்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற மாநாடு