December 6, 2017 தண்டோரா குழு
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து நடிகர் விஷால் புகார் மனு அளித்துள்ளார்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் தாக்கல் செய்தார். ஆனால் வேட்பு கையெழுத்து குளறுபடி காரணமாக நீண்ட இழுபறிக்கு பின் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் வேலுச்சாமி அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து நடிகர் விஷால் புகார் மனு அளித்துள்ளார். அப்போது, வேட்புமனு பரிசீலனையின் போது நடந்த நிகழ்வுகள் குறித்து ராஜேஷ் லக்கானியிடம் விளக்கினர்.
மேலும், வேட்புமனு விவகாரத்தில் தன்னிடம் மட்டுமே பாரபட்சம் காட்டப்பட்டதாக லக்கானியிடம் விஷால் கூறியுள்ளார். இது குறித்து பரிசீலிப்பதாக ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.