December 6, 2017 தண்டோரா குழு
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் வேட்பு மனுவில் கையெழுத்து குளறுபடி காரணமாக நீண்ட இழுபறிக்கு பின் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால்,
சத்தியமாக நடப்பது என்ன என்பது எனக்கு தெரியவில்லை.தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என தெரியாது. சினிமாவை போல் நிமிடத்திற்கு நிமிடம் காட்சிகள் மாறுகிறது.வேட்புமனுவை ஏற்றுக்கொண்டதாக தேர்தல் அலுவலர் என்னிடம் கூறியது வீடியோவாக உள்ளது.அனைத்துகட்சி வேட்பாளர்களும் என்னைப்பார்த்து பயப்படுவது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், மக்களுக்கு நல்லது செய்ய முடிவெடுத்ததற்கு இதுதான் தண்டனையா”என்று ஆதங்கத்துடன் கூறிய அவர் சுயேட்சை வேட்பாளர்களில் ஒருவருக்கு எனது முழு ஆதரவைத் தந்து ஜெயிக்க வைத்து மக்களுக்கு நல்லது செய்வேன்” என கூறியுள்ளார்.