• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கல்லாய் மாறும் நேபாள சிறுவன்.

June 10, 2016 தண்டோரா குழு

நேபாளத்தைச் சேர்ந்த பாக்லுங்க் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தா, நார் தம்பதிகள். இவர்களது குழந்தை ரமேஷ். பிறந்த 15 நாட்களுக்குப் பிறகு குழந்தையின் உடலின்தோல் உரிய ஆரம்பித்திருக்கிறது.

பிறகு வளர ஆரம்பித்த புதிய தோல் மீனின் உடம்பில்வளரும் செதில்கள் போன்று தடிமனாகவும், சுரசுரப்பானதாகவும் காணப்பட்டது. நாளடைவில் அந்தத் தோல் இடையில் பிளவுபட்டு மிகுந்த வலியைக்கொடுக்கத்துவங்கியது.

வளர, வளரத் தோலின் பருமன் காரணமாக கால்களும், கைகளும் சுற்றிக்கொள்ள ஆரம்பித்துவிட்டன. அச்சிறுவனால் எழுந்து நடக்கவோ, பேசவோ முடியாத நிலை உருவானது.

பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. மற்ற சிறுவர்கள் ரமேஷின் நிலை கண்டு பயந்து ஓடத்துவங்கினர். சிறுவனின் தந்தை பல மருத்துவமைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கக்கோரியுள்ளார். ஒரு சில மருத்துவர்கள் கிருமிகளினால் ஏற்பட்ட இத்தகைய நோயைக்
குணப்படுத்த இயலாது என்று கைவிரித்து விட்டனர். வேறு சிலர் இந்த கெட்டித் தோல்வியாதியைக் குணப்படுத்த மிகுந்த பணம் செலவாகும் என்று கூறியுள்ளனர்.

மாதம் 7,000 ரூபாய் வருவாயே உள்ள நந்தாவினால் தனது மகனுக்கு மருத்துவம் பார்க்க முடியாததால் மகனின் துன்பத்தை போக்க வழியறியாமல் தவித்து வந்துள்ளார். தாய் நார்க்கும் மகனிடம் அதிக கவனம் செலுத்த வேண்டிய காரணத்தினால் வேலைக்குச்செல்லமுடியவில்லை.

நாளாக ஆக அச்சிறுவனால் நடக்கவோ பேசவோ முடியாத நிலை ஏற்பட்டது. பசிக்கும் போதும், கழிவறைக்குச் செல்ல வேண்டிய போதும் மட்டும்சைகையினால் தெரிவிக்கக் தொடங்கியுள்ளான். மகனின் இத்துயரத்தைக் கண்கூடாகக்கண்டும் கூட எதுவும் செய்ய இயலாமல் பெற்றோர்கள் துயரப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேபாளத்தின் பிரபல பாடகரான சன்சஞ் ஷேர்ஸ்தா என்பவர் தனது நண்பரான பிரிட்டிஷ் பாடகி ஜோஸ் ஸ்டோன் என்பவரிடம் இச்சிறுவனின் நிலைபற்றிக்கூறியதுடன் புகைப்படங்களையும், காணொளிக் காட்சிகளையும் காண்பித்துள்ளார்.

இரக்கமுற்ற ஜோஸ், நேபாளத்தின் தலைநகரமான காட்மண்டுவில் ஒரு இன்னிசை நிகழ்ச்சியை நடத்தி, அதன் மூலம் கிடைக்கும் தொகையை இச்சிறுவனின் மருத்துவச்செலவுக்கு அளித்துள்ளார்.

தற்பொழுது அச்சிறுவன் சிகிச்சையின் பலனாகச் சிறிது முன்னேற்றம் அடைந்துள்ளான். டாக்டர்.சபினா பட்றாய் சிறுவனை இன்னும் சில காலத்தில் நடக்கவும் பேசவும் வைக்க
முடியும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

மருத்துமனையில் சேர்த்த முதல் நாளில் ரமேஷ் மிகவும் மோசமான நிலையில்இருந்ததாகவும், உடலில் இருந்த தோலைச்சுரண்டி எடுத்துக் களிம்பு போன்ற மருந்துகளைத் தடவி, நோய் எதிர்ப்பு சக்திற்குத் தேவையான மருந்துகளை உட்கொள்ளச்செய்த பின்பு தான் சிறுவனது உடல் நிலை தேறத் தொடங்கியுள்ளது என்றும், காலந்தாழ்த்தாமல் முன்பே சிகிச்சையைத் தொடங்கியிருந்தால் முழுவதும்குணமாகாவிட்டாலும் வலிக்காவது சிறிது நிவாரணம் அளித்திருக்கலாம் என்றும்
தெரிவித்தார்.

தனது வாழ்நாள் முழுவதும் பாடகி ஜோஸ் ஸ்டோனுக்குத் தான் கடமைப்பட்டுள்ளதாகவும், தன் இயலாமையினால் தனது மகனை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிவிட்டதாகவும் வருத்தத்துடன் நந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க