May 30, 2016 தண்டோரா குழு
சச்சின் டெண்டுல்கரையும் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரும் வாக்குவாதம் செய்வது போல மிமிக்கிரி செய்து கிண்டலடித்து யூ டுயூப்பில் பதிவேற்றப்பட்ட வீடியோவால் பரபரப்பும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
ஏ.பி.ஐ. என்னும் நகைச்சுவை குழு அவ்வப்போது நகைச்சுவை செய்து வீடியோக்களை உருவாக்கி யூ டுயூப் என்னும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுவருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் அக்குழு கிரிக்கெட் வீரர்களான சச்சின் மற்றும் விராட் கோலி ஆகியோரில் யார் சிறந்த வீரர் என்பது குறித்தும் சச்சினும் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரும் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போலவும் மிமிக்ரி செய்து யூ டியூபில் பதிவு செய்துள்ளனர்.
மேலும், அவர்கள் ஸ்மாட்போனில் உள்ள Snap chat’s face-swap feature என்னும் ஆப்பினை பயன்படுத்தி இந்த வீடியோவினை பதிவுசெய்து அதனை யூ டுயூப்பில் பதிவேற்றம் செய்தனர். இதுமட்டுமின்றி அந்த வீடியோவிற்கான லிங்கினை ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கத்திலும் அவர்கள் ஷேர் செய்துள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது. இந்த நிலையில் இந்த வீடியோவிற்கு பிரபலங்கள் உட்படப் பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
இதையடுத்து இந்த வீடியோவை உருவாக்கிய தன்மய் பத் என்னும் காமெடியன் மீது மகாராஷ்டிர பிஜேபி அரசும் சிவசேனா கட்சியும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.அப்புகாரை அடுத்து தன்மய் பத் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து அனுபம் கேர் என்னும் பிரபல நகைச்சுவை நடிகர் கூறும் போது, தன்மய் பத்தின் வீடியோவில் நகைச்சுவையை உணர்வைத் தூண்டும் படியான காட்சிகள் எதுவும் இல்லை, ஆனால் பிறரின் மனதைப் புண்படுத்தும் விதத்தில் தான் அந்த வீடியோ பதிவு அமைந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.