• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னை டெஸ்ட் போட்டியை காண சச்சின்,தோனி ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு

December 16, 2016 தண்டோரா குழு

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5வது டெஸ்ட் போட்டிசென்னையில் நடைபெற்று வருகிறது. சச்சின் மற்றும் தோனி ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட்போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 – 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
இந்தியா – இங்கிலாந்து கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

கடந்த 2003ம் ஆண்டு முதல் சச்சினின் தீவிர ரசிகராகவும், இந்தியா விளையாடும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்று வரும் சச்சினின் தீவிர ரசிகரான சுதீர். இவர் ஒவ்வொரு போடியிலும் தேசிய கொடியை போல மூவண்ணங்களையும் உடல் முழுவதும் பூசிக்கொண்டு பெரிய தேசியக்கொடியுடன், சச்சினின் ராசியான 10 என்ற எண்ணுடன் போட்டியை காண வருவார்.

இவரைப்போலவே தோனியின் தீவிர ரசிகரான ராம்பாபு என்பவரும் உடல்முழுவதும் வர்ணம் பூசிக்கொண்டு தோனியின் ராசியான 7 என்ற எண்ணுடன் போட்டியை காண வருவார்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் சென்னை டெஸ்ட் போட்டியை காண வழக்கமாக ஆவலுடன் வந்தனர். ஆனால், அங்கு இவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான நிர்வாகிகள் கூறும் போது, “உடலில் வர்ணம் பூசி வந்ததால் அனுமதிக்கவில்லை என்றும்,சேப்பாக்கம் மைதானத்தில் நுழைய சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது .” என கூறினார்.

போட்டிக்கான டிக்கெட் இருந்தும் போட்டியை காண அனுமதிக்காதது வருத்தமளிப்பதாக சுதீர், ராம்பாபு தெரிவித்தனர்.

மேலும் படிக்க