December 6, 2016 பா.கிருஷ்ணன்
டிசம்பர் மாதம் என்றாலே துயரங்கள் நிறைந்த மாதமாக அமைந்துவிடுகிறது. முக்கிய பிரமுகர்களின் மறைவு,பெரிய விபத்து, இயற்கைச் சீற்றம் போன்றவற்றால் உயிரிழப்புகள் ஆகியவை டிசம்பர் மாதங்களிலே நேர்கின்றன.
தமிழக முதலமைச்சர்களான ராஜாஜி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் டிசம்பர் மாதம் மறைந்தனர். ராஜாஜி 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி முதலமைச்சராக இருந்தவர். பின்னால் 1972 டிசம்பர் 25 ம் தேதி உடல் நலக்குறைவால் மறைந்தார். அதை அடுத்து , 1973 டிசம்பர் 24 ம் தேதியில் தந்தை பெரியார் ஈ.வெ.ரா உடல்நலக்குறைவால் மறைந்தார்.
பின்னர் முதலமைசர் பதவியில் இருந்த எம்ஜிஆர் 1987 டிசம்பர் 24ம் தேதி மாரடைப்பால் காலமானார். தற்போது முதலமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதா டிசம்பர் 6 ம் தேதி சென்னை மருத்துவமையில் காலமானார்.
இவர்களில் ராஜாஜி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள். 1984 ம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்தியப் பிரதேசம் போபாலில் ஓர் அலையில் விஷவாய்வு கசிவு ஏற்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அதை அடுத்து 2௦௦4 ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி தமிழகம் உள்பட கிழக்கு கடற்கரை பகுதிகளில் சுனாமி தாக்கி பல்லாயிரம் பேர் உயிரிழந்தனர்.
2015 ம் ஆண்டு டிசம்பர் முதல் வாரம் சென்னையில் கொட்டி தீர்த்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சென்னை நகரமே மூழ்கியது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். பல லட்ச கணக்கில் பொருள்சேதம் ஏற்பட்டது.
இப்படி முக்கியத் தலைவர்களின் மறைவு , இயற்கைச் சீற்றம், விபத்து போன்றவற்றால் உயிர்சேதமும் பொருள்சேதமும் நேர்கின்றன, ஆக டிசம்பர் மாதம் துயரத்தை கொண்டுவருகிறது.