• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சமாஜ்வாதியிலிருந்து சிவ்பால் யாதவ் விலகல்

January 31, 2017 தண்டோரா குழு

சமாஜ்வாதி கட்சியிலிருந்து விலகப்போவதாக அக்கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவின் தம்பியும் அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவருமான சிவ்பால் யாதவ் கூறியுள்ளார்.

சமாஜ்வாதி கட்சியின் தேசிய மாநாடு லக்னோவில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது . இதில் அந்த கட்சியின் தேசிய தலைவராக உத்தரப் பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.

அக்கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் இனிமேல் ஆலோசகராகச் செயல்படுவார் என்றும் மாநிலத் தலைவர் சிவபால் யாதவ் பதவி நீக்கம் செய்யப்படுகிறார் என்றும் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து கட்சியில் கடந்த இரு மாதங்களாகவே உட்கட்சி பிரச்சினைகள் இருந்து வந்தன. இந்நிலையில் கட்சியிலிருந்து விலக உள்ளதாக சிவபால் யாதவ் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

“ சமாஜ்வாதி கட்சியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். புதுக்கட்சி துவங்குவது குறித்து உத்திரப்பிரதேசம் சட்டப்பேரவை தேர்தல் முடிவுக்கு பிறகு முடிவு செய்யப்படும். அதே நேரத்தில், புதுக்கட்சி துவங்குவேன் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை.

உத்திரப்பிரதேச முதலமைச்சர் அகிலேசால் வருகின்ற சட்டப்பேரவையில் சீட் மறுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன். சமாஜ்வாதி தொண்டர்கள் ஏராளமானோர் என்னை ஆதரிக்கின்றனர்.

கட்சியில் ஊழலை தடுக்க முயன்றதால் நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன். சொந்த மகனாலேயே, முலாயம் அவமானப்படுத்தப்பட்டார். வேண்டுமென்றே நான் அனுப்பிய ஆவணங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. முலாயம் மற்றும் எனக்கு எதிராக அகிலேஷ் செயல்பட்டு வருகிறார்”.

இவ்வாறு சிவபால் யாதவ் கூறினார்.

மேலும் படிக்க